கோருந்தாலோ
கோருந்தாலோ; (ஆங்கிலம்: Gorontalo; இந்தோனேசியம்: Gorontalo Hulontalo) என்பது இந்தோனேசியா, சுலாவெசி தீவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். இதன் தலைநகரம் கோருந்தாலோ நகரம். இந்த நகரம், கோருந்தாலோ மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. மினாகாசா தீபகற்பத்தில் (Minahasa Peninsula) அமைந்துள்ள கோருந்தாலோ மாநிலம், திசம்பர் 5, 2000 அன்று தனி மாநிலமாகப் பிரிக்கப்படும் வரை வடக்கு சுலாவெசி மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த மாநிலம், கிழக்கில் வடக்கு சுலாவெசி மாநிலத்தாலும்; மேற்கில் மத்திய சுலாவெசி மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. வடக்கில் சுலாவெசி கடலில் பிலிப்பீன்சுடன் கடல் எல்லையையும்; தெற்கில் தோமினி வளைகுடாவில் (Gulf of Tomini) ஒரு கடற்கரையையும் பகிர்ந்து கொள்கிறது. பொதுகோருந்தாலோ மாநிலத்தின் மக்கள் தொகையில், கோருந்தாலோ மக்கள், பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களின் மொழி கோருந்தாலோ மொழி ஆகும். மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு பேச்சுவழக்குகளில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. இசுலாம் பிரதான மதம்.[5] கோருந்தாலோவில் வேளாண்மை பிரதான தொழிலாகும். அதில் சோளம் (மக்காச்சோளம்), அரிசி, தேங்காய், கரும்பு, மெழுகுவர்த்தி, கொக்கோ, கிராம்பு மற்றும் காபி ஆகியவை முக்கிய பயிர்களில் அடங்கும்.[5] தோட்டத்துறைதோட்டத்துறையின் முதன்மை பொருட்களில் வாழைப்பழங்கள், பப்பாளி மற்றும் மாம்பழங்கள்; மிளகாய் மற்றும் தக்காளி; மஞ்சள் மற்றும் இஞ்சி; மற்றும் ஆர்க்கிட் மற்றும் பிற அலங்கார தாவரங்கள் ஆகியவை அடங்கும்.[5] கோழிகள், பசு மாடுகள் மற்றும் ஆடுகள் மிகவும் பொதுவான பண்ணை விலங்குகள். கடலில் மீன்பிடித்தல் மூலமாக, பெரும்பாலும் சேற்றுத் தாவி, இசுனாப்பர் மீன், சூரை மீன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள் பிடிக்கப்படுகின்றன.[5] மக்கள்தொகைகோருந்தாலோவின் சமயங்கள் (2022)[6] இசுலாம் (98.03%) சீர்திருத்தத் திருச்சபை (1.45%) இந்து சமயம் (0.34%) கத்தோலிக்க திருச்சபை (0.09%) பௌத்தம் (0.08%)
இந்த மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பு 12,025.15 கிமீ2 (4,642.94 சதுர மைல்); மற்றும் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,040,164 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது;[7] மற்றும் 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,171,681 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது;[8] 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 1,213,180 (611,780 ஆண்கள் மற்றும் 601,400 பெண்கள்) ஆகும். அந்த வகையில், இந்த மாநிலம், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 100.887 மக்கள் தொகை (261.30 சதுர மைல்) மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது.[1] இசுலாமிய சட்டங்கள்இந்த மாநிலம், மதீனாவின் தாழ்வாரம் (Bumi Serambi Madinah) எனும் உயரிய புனைப்பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தச் சிறப்புப் பெயர், இந்த வட்டாரத்தின் இசுலாமிய நாகரிகத் தோற்றத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. கோருந்தாலோ மாநிலத்தின் முந்தைய இராச்சியங்கள் அனைத்துமே இசுலாமிய சட்ட முறைமையைப் பயன்படுத்தியாக அறியப்படுகிறது. அரசு நிர்வாகம், சமூகம் மற்றும் நீதிமன்றத் துறை போன்ற முக்கிய்மான செயல்பாட்டுத் துறைகளில் இசுலாமிய சட்டத்திட்டங்கள் பயன் படுத்தப்பட்டன. அதனால்தான் இந்த மாநிலம், மதீனாவின் தாழ்வாரம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது[9] வரலாறு
![]() வரலாற்று ரீதியாக, கிழக்கு இந்தோனேசியாவில் இசுலாம் பரவுவதற்கான மையமாக கோருந்தாலோ இருந்துள்ளது.[10] 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இடச்சுக்காரர்கள் கோருந்தாலோவிற்கு வந்தார்கள். அதைத் தொடர்ந்து, உள்ளூர் இராச்சியங்களைக் கைப்பற்றினார்கள். இறுதியாக, கோருந்தாலோ மாநிலப் பகுதியை இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளுடன் இணைத்தார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, கோருந்தாலோ சிறிது காலம் சப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இறுதியாக இந்தோனேசிய குடியரசின் ஒரு பகுதியாக மாறியது. கோருந்தாலோ, இந்தோனேசிய குடியரசின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் இணைக்கப்பட்டது. இன்றைய நிலைசுகார்த்தோவின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிறிஸ்தவப் பெரும்பான்மை மாநிலமான வடக்கு சுலாவெசியுடன் இணைக்கப்பட்டது. வடக்கு சுலாவெசி மாநிலத்தின் கலாசார, மத வேறுபாடுகள் காரணமாகவும்; நாட்டின் பரவலாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், கோருந்தாலோ எனும் ஒரு புதிய மாநிலத்தை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்தது. எனவே, புதிய மாநிலம் 2000 டிசம்பர் 5-ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்டது. இந்தோனேசியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கோருந்தாலோ மிகக் குறைந்த அளவில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகும். 2017-ஆம் ஆண்டு நிலவரப்படி, மனித மேம்பாட்டு குறியீட்டில் கோருந்தாலோ 0.670 மதிப்பெண்களைப் பெற்றது, இது இந்தோனேசியாவிலேயே மிகக் குறைந்த குறியீடு ஆகும். அந்த வகையில் இது 34 மாநிலங்களில் 28-ஆவது இடத்தில் உள்ளது.[11] உள்கட்டமைப்புவடக்கு சுலாவெசி போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கோருந்தாலோவின் உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது. இந்த மாநிலம் பெரும்பாலும் மின்சார நெருக்கடிகள் மற்றும் நீர் பற்றாக்குறை போன்ற இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.[12] ஆயினும்கூட, அரசாங்கம் தற்போது கோருந்தாலோவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சித்து வருகிறது. கோருந்தாலோ வெளிப்புற வளைய சாலை (Gorontalo Outer Ring Road), இரண்டாங்கான் அணை (Randangan Dam) மற்றும் ஆங்கிரெக் மின் உற்பத்தி நிலையம் (Anggrek Power Plant) போன்ற கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.[13] காலநிலைகாலநிலையைப் பொறுத்தவரை, கோருந்தாலோ மாநிலம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருப்பதால், அதிகமான வெப்பநிலையைக் கொண்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை செப்டம்பரில் 22.8°C ஆகும். அதிகபட்ச வெப்பநிலை அக்டோபரில் 33.5°C வெப்பநிலையுடன் காணப்படுகிறது. 2013-ஆம் ஆண்டில் சராசரி வெப்பநிலை 26.2°C முதல் 27.6°C வரை இருந்தது. கோருந்தாலோ மாநிலத்தில் ஒப்பீட்டளவில் அதிக ஈரப்பதம் உள்ளது. 2013-இல் சராசரி ஈரப்பதம் 86.5% விழுக்காட்டை எட்டியது. மே மாதத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு உள்ளது. அதாவது 307.9 மிமீ; ஆனால் அதிக மழை நாட்கள் சூலை மற்றும் திசம்பர் மாதங்களில் ஆகும்; அதாவது 24 நாட்கள். காட்சியகம்
மேலும் காண்கமேற்கோள்கள்
சான்றுகள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia