இளவரசி சிரிந்தோர்ன்![]() இளவரசி மகா சக்ரி சிரிந்தோர்ன் (Maha_Chakri_Sirindhorn) பிறப்பு 2 ஏப்ரல் 1955), தாய்லாந்தின் மன்னர் பூமிபால் அதுல்யாதெச்சிற்கு இரண்டாவது மகள் ஆவார் [1] தாய் மக்கள் பொதுவாக இவரை "பிரா தெப்" அதாவது "இளவரசி தேவதை" என்று குறிப்பிடுகிறார்கள். தாய்லாந்தில் பெண்கள் அரசனுக்கு சமமான பெயர் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், இவரது சகோதரர் அரசர் மகா வஜிரலோங்க்கோர்னின் தலைப்புக்கு சமமாக இவருக்கும் இப்பெயர் இடப்பட்டது. மேலும்,1974 ஆம் ஆண்டில் பெண் வாரிசுகளை அனுமதிக்க, தாய் அரசியலமைப்பு மாற்றப்பட்டது, இதனால் இவர் அரியணைக்கு தகுதியுடையவர் ஆனார்.[2][3] அரச குடும்பத்தின் மூத்த பெண் குழந்தையாக இருந்ததால் (வெளிநாட்டு சாமானியரை மணந்த இளவரசி உபோல்ரதான ராஜகன்யாவைத் தவிர), இவரது நிலை இளவரசி அரசியுடன் ஒப்பிடத்தக்கது.[4] ஆரம்ப கால வாழ்க்கைசிரிந்தோர்ன் 1955 ஏப்ரல் 2 அன்று துசிட் அரண்மனையின் ஆம்போர்ன் சாத்தான் குடியிருப்பு மண்டபத்தில் பூமிபோல் மற்றும் ராணி சிரிகிட் ஆகியோரின் மூன்றாவது குழந்தை பிறந்தார். அரச தம்பதியினருக்கு ஒரு மகன் இருப்பதால், 1974 ஆம் ஆண்டில் தாய் அரசியலமைப்பு மாற்றப்பட்டது. இது 1978 ஆம் ஆண்டில் இளவரசி பஜ்ரகிட்டியபா பிறக்கும் வரை சிரிந்தோர்னை சிம்மாசனத்தில் ( வஜிரலோங்கொர்னுக்குப் பிறகு) இரண்டாவது வரிசையில் வைத்தது. டிசம்பர் 2012 இல், உடலில் சேர்ந்த கால்சியம் படிவுகளை அகற்ற சிரிந்தோர்ன் சிலகாலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.[5] ஆரம்ப கல்விசிரிந்தோர்ன் தாய்லாந்தின் அரச குடும்ப மற்றும் அரண்மனை ஊழியர்களின் குழந்தைகளுக்காக நிறுவப்பட்ட சித்ரலாடா பள்ளியில் தனது கலியை பெற்றார்.[6] இவர் 1967 ஆம் ஆண்டில் முதன்மை நிலை (தரம் 7), 1972 இல் மேல்நிலை நிலை (தரம் 12), மற்றும் 1975 இல் தேசிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.[7] உயர் கல்வி1975 ஆம் ஆண்டில் இவர் சுலலாங்கொர்ன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு கலைப்பிரிவில் இளங்கலை பட்டம், முதல் தர மேதகைமை மற்றும் 1976 இல் வரலாற்றில் தங்கப் பதக்கம் பெற்றார்.[7] 1976 ஆம் ஆண்டு முதல் இரண்டு பட்டதாரி திட்டங்களில் தனது படிப்பைத் தொடர்ந்தார். 1980 இல் கிழக்கித்திய கல்வெட்டியல் ( சமசுகிருதம் மற்றும் கெமர் மொழி ) ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார் [7] மேலும், 1980 இல் சில்பாகார்ன் பல்கலைக்கழகத்தில் தொல்பொருளியல் துறையில் பட்டம் பெற்றார். அக்டோபர் 1977 முதல், புகழ்பெற்ற சமசுகிருத அறிஞர் சத்ய விராத் சாஸ்திரியின் கீழ் இரண்டு ஆண்டுகள் பாங்காக்கில் சமசுகிருதம் பயின்றார். 1978 ஆம் ஆண்டில், சுலலாங்கொர்ன் பல்கலைக்கழகத்தில் பாளி மற்றும் சமசுகிருதம் மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6] 1981 ஆம் ஆண்டில் ஸ்ரீநாகரின்விரோட் பல்கலைக்கழகத்தில் முனைவர் முனைவர் பட்டப்படிப்பில் சேர்ந்தார். மேலும் 1987 ஆம் ஆண்டில் வளர்ச்சி கல்வியில் முனைவரானார். 1984 ஆம் ஆண்டில் ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிய பிராந்திய தொலைநிலை உணர்திறன் பயிற்சி மையத்தில் இருந்து ஒரு சான்றிதழைப் பெற்றார். அங்கு இவர் இரண்டு மாதங்கள் படித்தார்.[8] ஏப்ரல் 2001 இல், சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சீனப் பண்பாடு பயின்றார்.[9] படைப்புகள் மற்றும் ஆர்வங்கள்தொழில்நுட்பத்தின் மீதான இவரது ஆர்வத்தைத் தவிர, வரலாற்றில் பட்டங்களையும், கல்வி வளர்ச்சியில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். சுலாச்சோம்க்லாவ் அரச கழக இராணுவப் பள்ளியின் வரலாற்றுத் துறையில் கற்பிக்கிறார். அங்கு இவர் துறையின் பெயரளவுத் தலைவராக உள்ளார். தாய் தவிர, சரளமாக ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் மாண்டரின் பேசுகிறார், தற்போது ஜெர்மன் மற்றும் இலத்தீன் மொழியையும் பயின்று வருகிறார். இவர் சீன இலக்கியத்தை தாய் மொழியில் மொழிபெயர்க்கிறார்.[10] அவர் ஒரு திறமையான கலைஞர் மற்றும் தாய் பாரம்பரிய இசையின் தீவிர விளம்பரதாரர் ஆவார். அவரது தந்தை பூமிபால் அதுல்யாதெச்சைப் போலவே, இளவரசி சிரிந்தோர்ன் ஹெச்எஸ் 1 டி என்ற அழைப்பு அடையாளத்துடன் அமெச்சூர் வானொலி வைத்திருக்கிறார்.[11] உதவித்தொகைலிவர்பூல் பல்கலைக்கழகம் சிரிந்தோர்னின் நினைவாக ஒரு மதிப்புமிக்க புதிய உதவித்தொகையை அறிமுகப்படுத்தியது. ஒரு ஆண்டு முதுநிலை திட்டத்தை முடிக்க தாய்லாந்து மாணவருக்கு லிவர்பூலில் படிக்க முழு உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும். உதவித்தொகை அனைத்து பாடங்களுக்கும் வழங்கப்படும். அதில் ஒரு வருடம் கற்பிக்கப்பட்ட முதுநிலை திட்டம் வழங்கப்படுகிறது; இருப்பினும், இளவரசி சிரிந்தோர்னுடன் தொடர்புடைய அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், கலை, புவியியல், வரலாறு மற்றும் மொழி போன்ற ஒரு பாடப்பிரிவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உதவித்தொகைக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் தாய்லாந்து நாட்டவராக இருக்க வேண்டும். மேலும் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு கற்பித்த முதுநிலை திட்டத்தைப் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்கனவே வைத்திருக்க வேண்டும். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia