பரீத் சகாரியா![]() பரீத் சகாரியா (Fareed Rafiq Zakaria சனவரி 20 1964) இந்திய அமெரிக்க எழுத்தாளர், இதழாளர் நூலாசிரியர் ஆவார். அமெரிக்க செய்தித் தாளான வாசிங்டன் போஸ்ட், வார இதழ்களான நியூஸ் வீக், டைம் போன்றவற்றில் எழுதி வருகிறார். ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.[1] இளமைக்காலம்மும்பையில் பிறந்த சகாரியா கொங்கனி இசுலாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[2] இவருடைய தந்தை ரபீக் சகாரியா இந்தியத் தேசியக் காங்கிரசுக்காரர். தாயார் சன்டே டைம்ஸ் ஆப் இந்தியா என்ற இதழின் ஆசிரியர். பள்ளிப் படிப்பை மும்பையில் முடித்துவிட்டு, 1986 இல் யேல் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். அங்குப் படிக்கும்போது அரசியல் சங்கத்தின் தலைவர், யேல் அரசியல் மாத இதழ் ஒன்றில் ஆசிரியர் எனப் பொறுப்புகள் ஏற்றுச் செயல்பட்டார். 1993 இல் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பணிகள்அமெரிக்க அயல் நாட்டுக் கொள்கைகள் பற்றிய ஆய்வுப் பணிகள் ஆர்வர்டில் நடந்தபோது அந்தப் பணிகளை இயக்கினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு உறவுகள் பற்றி ஒரு கருத்தரங்கில் பேசினார். 2000 இல் நியூஸ் வீக் இன்டர்நேஷனல் பத்திரிகையின் ஆசிரியர் ஆனார். நியூஸ் வீக் பத்திரிகையில் பத்தி எழுத்தாளர் ஆனார். 2010 ஆக்சுடில் டைம் இதழின் சுழலும் ஆசிரியராகவும் பத்தி எழுத்தாளராகவும் ஆனார்.[3] தி வாசிங்டன் போஸ்ட் மற்றும் தி அட்லான்டிக் மாத இதழிலும் எழுதி வருகிறார். மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia