குல்தீப் நய்யார்
குல்தீப் நய்யார் (14 ஆகத்து 1923 - 23 ஆகத்து 2018) இந்தியாவின் குறிப்பிடத்தக்க பத்திரிக்கையாளர் மற்றும் சிண்டிகேட்டட் கட்டுரையாளர். இடதுசாரிப் பார்வை கொண்ட அரசியல் விமர்சகர். துவக்கக் கால வாழ்க்கைநய்யார் சியால்கோட்டில் 14 ஆகஸ்ட் 1923 அன்று பிறந்தார். இவருடைய பெற்றோர் குர்பாக்சு சிங் மற்றும் பூரன் தேவி ஆவர். இவர் துவக்கக் கல்வியை சியால்கோட்டிலுள்ள கன்டா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவர் சியால்கோட்டிலுள்ள முர்ரே கல்லூரியிலும், அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள மெடில் இதழியல் கல்லூரிகளிலும் பயின்றார்.[2] புதுதில்லியில் தங்கியிருந்த காலத்தில், மக்களவை உறுப்பினரான மௌலானா ஹஸ்ரத் மொஹானியைச் சந்தித்தார். அவர், குல்தீப்பை ஆங்கிலத்தில் எழுத தூண்டினார்; உருது பத்திரிக்கையாளராக இருப்பதில் பயனில்லை, ஆகவே ஆங்கிலத்தில் பணியைத் தொடர வற்புறுத்தினார். தொழில் வாழ்க்கைகுல்தீப் நய்யார் உருது பத்திரிக்கையாளராக தன் பணியைத் துவக்கினார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும், ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். நூல் விவரத் தொகுப்புகுல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 'எல்லைகளுக்கு இடையே', 'தூரத்து உறவினர்கள்:துணைக் கண்டத்தின் கதை', 'நேருவுக்குப் பிறகு இந்தியா' மற்றும் 'ஸ்கூப்' போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள். ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia