ஜான் சாம்பர்சு
ஜான் தாமசு சாம்பர்சு (John Thomas Chambers [1][2][3], பிறப்பு: ஆகத்து 23, 1949) சிஸ்கோ நிறுவனத்தின் தற்போதைய செயல் தலைவரும் முன்னாள் முதன்மை செயல் அலுவலரும் ஆவார். இளமைக்காலம்![]() சாம்பர்சு ஆகத்து 23, 1949இல் ஒகையோவின் கிளீவ்லாந்தில் ஜான் டியூனர் "ஜாக்"கிற்கும் சூன் சாம்பர்சுக்கும் மகனாகப் பிறந்தார்.[5] இவரது தாய் ஓர் மனநல மருத்துவர்; தந்தை மகப்பேறு மருத்துவர்.[6] இவரது குடும்பம் மேற்கு வர்ஜீனியாவின் கன்ஹா நகரில் வசித்தனர்.[7] சாம்பர்சுக்கு ஒன்பது அகவைகள் நிறைகையில் அவருக்கு எழுத்துமயக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.[8][9] குணப்படுத்துபவரின் துணையுடன் இக்குறைபாட்டுடன் வாழக் கற்றுக்கொண்டார்.[7] கல்விஇவர் மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் அறிவியலிலும் வணிகம் மற்றும் சட்டத்திலும் இளங்கலைப் பட்டங்கள் பெற்றுள்ளார். இந்தியானாப் பல்கலைகழகத்தின் கெல்லி வணிகப் பள்ளியில் நிதியம் மற்றும் மேலாண்மையில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார்.[10] முன்னதாக, 1967 முதல் 1968 வரை டியூக் பல்கலைக்கழகத்தின் எட்மண்டு பொறியியல் பள்ளியிலும் படித்துள்ளார்; பட்டப்படிப்பை முடிக்கவில்லை.[11] பணிவாழ்க்கைமுதுகலை வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றபின்னர், தமது பணிவாழ்க்கையை தொழினுட்ப விற்பனைத் துறையில் ஐபிஎம் நிறுவனத்தில் துவங்கினார். 1976 முதல் 1983 வரை அங்கு பணி புரிந்தார். 1983இல் வாங் லாபரேட்டரீசில் சேர்ந்தார். அங்கு 1987இல் ஐக்கிய அமெரிக்க இயக்கத்திற்கு துணைத் தலைவராக முன்னேறினார். 1989இல் $2 பில்லியனாக இருந்த வாங்கின் இலாபம் 1990இல் $700 ஆக உயர்ந்தது. 1991இல், தமது 42ஆவது அகவையில் வாங் நிறுவனத்தை விட்டு விலகி சிஸ்கோவில் இணைந்தார்.[6] 1983இல் ஓர் புத்தாக்க நிறுவனமாக துவங்கிய சிஸ்கோவில் சாம்பர்சு உலகளாவிய விற்பனை மற்றும் இயக்கத் துறையில் மூத்த துணைத் தலைவராக சேர்ந்தார். [10] ![]() 1990–1994 காலகட்டத்தில் மூத்த துணைத்தலைவராகவும்,1994–1995இல் செயல் துணைத் தலைவராகவும் முன்னேறினார். சனவரி 1995 முதல் முதன்மை செயல் அலுவலராகப் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலத்தில் நிறுவனம் $70 மில்லியன் ஆண்டு வருமானத்திலிருந்து தற்போதைய வருமானமான $46 பில்லியனுக்கு முன்னேறியுள்ளது.[12] நவம்பர் 2006இல் முதன்மை செயல் அலுவலராக இருப்பதுடன் நிறுவன வாரியத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13] சூலை 27, 2015இல் சக் இராபின்சு சிஸ்கோவின் முதன்மை செயல் அலுவலராக அறிவிக்கப்பட்டார்.[14] தனிவாழ்க்கைசாம்பர்சுக்கும் மனைவி எலைனுக்கும் இரு மகன்கள் பிறந்துள்ளனர்; லிண்ட்சே, ஜான்.[15] நூல்கள்கீழ்க்காணும் நூல்களில் சாம்பர்சின் மேலாண்மை குறித்தும் தலைமைப் பண்புகள் குறித்தும் எழுதப்பட்டுள்ளன:
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia