இவான் பாவ்லோவ்
இவான் பெத்ரோவிச் பாவ்லோவ் (Ivan Petrovich Pavlov, உருசியம்: Ива́н Петро́вич Па́влов; செப்டம்பர் 26 [யூ.நா. செப்டம்பர் 14] 1849 – பெப்ரவரி 27, 1936) ஓர் புகழ்பெற்ற உருசிய உளவியலாளரும் உடலியங்கியலாளரும் ஆவார். 1860களின் சிறந்த உருசிய இலக்கிய விமரிசகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட திமித்ரி இவானோவிச் பிசாரெவ்வின் முற்போக்கான கருத்துக்களாலும் உருசியாவின் மருத்துவத்துறைக்கு தந்தை என அறியப்படும் இவான் செசேனோவ் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட பாவ்லோவ் தாம் எடுக்கவிருந்த சமயப் பணியைக் கைவிட்டு அறிவியல் தேடலில் தம் வாழ்நாளை செலவழிக்கத் தீர்மானித்தார். 1870இல் சென் பீட்டர்ஸ்பேர்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயல்பியலையும் கணிதத்தையும் படிக்கத் தேர்ந்தெடுத்தார்.[1] இவான் தம் வாழ்நாளை உடலியங்கியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் செலவழித்தார். இதனால் பல வியத்தகு கண்டுபிடிப்புகளையும் கருத்துக்களையும் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு வழங்கினார். பாவ்லோவ்வின் ஐந்து விதிகள்:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: இவான் பாவ்லோவ்
|
Portal di Ensiklopedia Dunia