சின்யா யாமானாக்கா
சின்யா யாமானாக்கா (Shinya Yamanaka|山中 伸弥, பிறப்பு செப்டம்பர் 4, 1962, இகியாசியோசாக்கா, ஒசாக்கா, சப்பான்) ஒரு சப்பானிய மருத்துவ ஆய்வாளர்[6]. இவர் குருத்தணு (குருத்து உயிரணு) ஆய்வில் முன்னணி ஆய்வாளர். 2012 ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசை சான் குர்தோன் அவர்களுடன் சேர்ந்து வென்றுள்ளார். யாமானாக்கா தற்பொழுது குருத்தணு ஆய்வுக்கான அனைத்துலகக ஆய்வுக் குழுமத்தின் தலைவராக உள்ளார். இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் முன்னக மருத்துவ அறிவியல் கல்விக் கழகத்தில் (Institute for Frontier Medical Sciences) பேராசிரியராகவும் இயக்குநராகவும் இருக்கின்றார். கலிபோர்னியாவில் உள்ள கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம் என்னும் நிறுவனத்திலும் முதுநிலை ஆய்வாளராக இருக்கின்றார். இவர் 2011 ஆம் ஆண்டிற்கான மருத்துவத் துறைக்கான வுல்ஃபு பரிசை உருடோல்ஃபு சேனிழ்சு (Rudolf Jaenisch) என்பாரோடு வென்றார்[7]. 2012 ஆம் ஆண்டிற்கான மில்லேனியம் பரிசை இலினசு தோர்வால்டுசு என்பாருடன் சேர்ந்து வென்றார். உசாத்துணைபொதுவான துணைநூல்களும் கட்டுரைகளும்:
அடிக்குறிப்புகளும், சான்றுசுட்டுகளும்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia