சூல்ஸ் ஹொஃப்மன்
சூல்ஸ் ஹொஃப்மன் (Jules A. Hoffmann, பிறப்பு: ஆகத்து 2, 1941) லக்சம்பர்கில் பிறந்த பிரெஞ்சு[1] உயிரியலாளர் ஆவார். பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்கில் உள்ள தேசிய அறிவியல் ஆய்விற்கான மையத்தின் (CNRS) ஆய்வு இயக்குனராகவும் நிர்வாகக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். 2007ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிவியல் அகாதெமியின் தலைவராக பொறுப்பேற்றார். இவரும், ரால்ஃப் ஸ்டைன்மனும், புரூஸ் பொய்ட்லரும் இணைந்து 2011 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டனர்[2]. ஒரு நோய்க் கிருமி உடலுக்குள் நுழைந்த பின்னர் அதனை உணர்ந்து நோயெதிர்ப்பு ஆற்றல் எவ்வாறு செயல்பட ஆரம்பிக்கிறது, கிருமியை அழிக்க என்னென்ன முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பேராசிரியர்கள் பொய்ட்லரும், ஹொஃப்மனும் கண்டறிந்திருந்தனர். நோபல் பரிசின் மற்றைய பாதி கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டைன்மன் என்பவருக்கு "புதிய அச்சுறுத்தல்கள் வர வர அவற்றுக்கேற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது" என்பதைக் கண்டுபிடித்தமைக்காகக் கொடுக்கப்பட்டது[3]. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia