கியரி உருவுக்குன்
கியாரி உருவுக்குன் (Gary Bruce Ruvkun, பிறப்பு: 26 மார்ச் 1952) ஓர் அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர் ஆவார்.[1] இவர் மாசச்சூசெட்டு பொது மருத்துவமனையில் பணியாற்றுபவர். ஆர்வேடு மருத்துவத் துறையில் மரபணுவியல் பேராசிரியராகவும் பணியாற்றுகின்றார்.[2] உருவுக்குன் விட்டர் அம்புரோசுடன் சேர்ந்து 2024 ஆண்டிற்கான உடலியங்கியல் மருத்துவ நோபல் பரிசை வென்றார். சிற்றிழை இரைபோ இனியக் கருக்காடி எவ்வாறு மரபணுவைக் கட்டுப்படுத்தி செயற்படுகின்றது என்பதைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு வழங்கப் பெற்றுள்ளது. இளமையக் காலமும் கல்வியும்உருவுக்குன் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர்கள் சாமுவேல் உருவுக்குன்னும் தோரா (Dora) உருவுக்குன்னும் (தாயின் திருமனத்துக்கு முன்னான குரேவிச்சு (Gurevich) உருவுக்கும் 1973 ஆம் ஆண்டில் பெரிக்கிலியின் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரிய இயற்பியல் (Biophysics) முதன்மையாக கொண்ட இளங்கலைப் பட்டம் பெற்றார். இதே உயிரிய இயற்பியல் படிப்பில் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் 1982 இல் முனைவர் பட்டம் பெற்றார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia