நாடுகளின் அடிப்படையில் 2024இல் இருந்த உலக பாரம்பரியக் களங்கள்
உலக பாரம்பரியக் களம் (World Heritage Site) என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும்[1]. இது, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம்.. இவை நமது கடந்த காலத்திலிருந்து நமக்கு மரபுவழி அளிக்கப்பட்டு, இன்று நாம் அவற்றுடன் வாழ்ந்த பின்னர், தொடர்ந்து வருங்காலத்தில் நமது சந்ததியினருக்கு அளிக்க வேண்டிய, மாற்றீடு செய்யப்பட முடியாத, சிறந்த, வாழ்வையும், மன ஊக்கத்தையும் தரக்கூடிய, இயற்கை மற்றும் பண்பாட்டு மூலவளங்களாகும். இவை உலகின் எந்த இடத்தில் அமைந்திருந்தாலும், உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்றாகக் கருதப்படுவதனால், இவை தனித்துவமானவையாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், இத்தகைய பாரம்பரியக் களங்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் பேணிப் பாதுகாத்தலை ஊக்குவிக்கின்றது[1]
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு, நாடுகளின் பொதுக் குழுவினால் தெரிவு செய்யப்படும். இந்த உலகப் பாரம்பரியக் குழுவானது 21 பிரதிநிதிகளைக் கொண்டிருப்பதுடன், இந்தப் பிரதிநிதிகள் ஒரு ஆண்டில் ஒருமுறை ஒன்றாகக் கூடுவார்கள். இந்தப் பிரதிநிதிகள் ஆறு ஆண்டுகாலம் தொடர்ந்து குழுவில் இருக்க முடியும் என்றாலும், வேறு நாடுகளுக்கும் குழுவில் இருக்கும் சந்தர்ப்பத்தை அளிப்பதற்காக, பொதுவாக நான்கு ஆண்டுகளில் குழு உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுப்பார்கள். 2014 இல் இருக்கும் 21 குழு உறுப்பினர்களும் அல்சீரியா, கொலொம்பியா, குரோவாசியா, பின்லாந்து, ஜெர்மனி, இந்தியா, ஜமேக்கா, ஜப்பான், கசக்ஸ்தான், லெபனான், மலேசியா, பெரு, பிலிப்பீன்சு, போலந்து, போர்த்துகல், கத்தார், தென் கொரியா, செனிகல், செர்பியா, துருக்கி, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர்.[2] இவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகள், உலகப் பாரம்பரியக் களங்களுக்கான சாசனத்தில் கையொப்பமிட்டு, ஏற்புறுதி அளித்தவையாக இருக்கும்.[3] இந்தக் குழுவே, பாரம்பரியக் களங்களுக்கான பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய புதிய களங்களைத் தெரிவு செய்வதற்குப் பொறுப்பாகவும், சாசனத்தின் உள்ள விடயங்கள் சரியானபடி நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும்.[4]
2014 ஆம் ஆண்டு, 25 ஆம் நாள் உள்ள நிலவரப்படி மொத்தமாக 1007 உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 161 நாடுகளில் அமைந்துள்ள இக்களங்களில், 779 பண்பாட்டுக் களங்களும், 197 இயற்கைசார் களங்களும், 31 கலப்பு இயல்புக் களங்களும் அடங்குகின்றன. ஏற்கனவே பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இரு களங்கள் நீக்கப்பட்டுள்ளன.[5] பட்டியலில் இருக்கும் 46 களங்கள் ஆபத்தில் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.[6]கத்தார் இலுள்ள தோகா நகரத்தில் 2014 இல் நிகழ்ந்த உலகப் பாரம்பரியக் குழுவிற்கான 38 ஆவது கூட்டத்தொடரில், மியான்மர் இலிருந்து முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு களம் 1000 ஆவது தெரிவாக அமைந்தது. 10 நாட்களாக நடந்த இந்த கூட்டத்தில் மொத்தமாக 26 புதிய களங்கள்[7] பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. மேலும் நான்கு களங்களை குழு தெரிவு செய்து, அவை புதிதாக மேலதிகமாகச் சேர்க்கப்படலாம் என ஒப்புதல் அளித்துள்ளது.[8]
போர்க்காலங்களிலும் இந்தச் சின்னங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பது இதன் முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்[9].
சில களங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்குச் சொந்தமாக இருப்பதனால் வலயங்களின் அடிப்படையில் கணக்கிடும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதனால் இவ்வாறு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுகின்றது.
அதிக பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள் பட்டியல்
குறிப்பு: 10 உம் அதற்கு மேற்பட்ட பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகளே இங்கே காட்டப்பட்டுள்ளன.
மண்ணிறம்: 40 உம் அதற்கு மேற்பட்ட பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்
மெல்லிய மண்ணிறம்: 30 இலிருந்து 39 பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்
செம்மஞ்சள் நிறம்: 20 இலிருந்து 29 பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்
நீலம்: 15 இலிருந்து 19 பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்
பச்சை: 10 இலிருந்து 14 பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்
குறிப்புகள்
↑பட்டியலிலுள்ள Minaret and Archaeological Remains of Jam, Cultural Landscape and Archaeological Remains of the Bamiyan Valley ஆகிய இரு பண்பாட்டுக் களங்களும் ஆபத்திலுள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
↑ 2.02.1The cultural site Jesuit Missions of the Guaranis: San Ignacio Mini, Santa Ana, Nuestra Señora de Loreto and Santa Maria Mayor (Argentina), Ruins of Sao Miguel das Missoes (Brazil) is shared between Argentina and Brazil.
↑ 3.03.13.23.33.43.5The cultural site Qhapaq Ñan, Andean Road System is shared between Argentina,
↑ 4.04.1The cultural site Fertö / Neusiedlersee Cultural Landscape is shared between Austria and Hungary.
↑ 5.05.15.25.35.45.5The cultural site Prehistoric Pile dwellings around the Alps is shared between Austria, France, Germany, Italy, Slovenia, and Switzerland,
↑ 6.06.1The natural site Belovezhskaya Pushcha / Białowieża Forest is shared between Belarus and Poland.
↑ 7.007.017.027.037.047.057.067.077.087.09The cultural site Struve Geodetic Arc is shared among Belarus, Estonia, Finland, Latvia, Lithuania, Moldova, Norway, Russia, Sweden, and Ukraine.
↑ 8.08.1The cultural site Belfries of Belgium and France is shared between Belgium and France.
↑பட்டியலிலுள்ள Belize Barrier Reef Reserve System இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑பட்டியலிலுள்ள பண்பாட்டுக் களமான City of Potosi ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑ 11.011.111.2The natural sites Sangha Trinational is shared between Canada and the United States.
↑ 12.012.1The natural sites Kluane / Wrangell-St Elias / Glacier Bay / Tatshenshini-Alsek and Waterton Glacier International Peace Park are shared between Canada and the United States.
↑பட்டியலுள்ள இயற்கைக் களமான Manovo-Gounda St Floris National Park ஆபத்திலிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
↑பட்டியலுள்ள பண்பாட்டுக் களமான Manovo-Gounda St Floris National Park ஆபத்திலிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
↑ 15.015.115.2The natural sites Silk Roads: the Routes Network of Chang'an-Tianshan Corridor is shared between China and the United States.
↑பட்டியலுள்ள இயற்கைக் களமான Los Katíos National Park ஆபத்திலிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
↑ 17.017.1The natural site Talamanca Range-La Amistad Reserves / La Amistad National Park is shared between Costa Rica and Panama.
↑ 18.018.1The natural site Mount Nimba Strict Nature Reserve is shared between Côte d'Ivoire and Guinea.
↑பட்டியலுள்ள இயற்கைக் களங்களான Mount Nimba Strict Nature Reserve, Comoé National Park ஆபத்திலிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
↑பட்டியலிலுள்ள இயற்கைக் களங்களான Virunga National Park, Kahuzi-Biega National Park, Garamba National Park, Salonga National Park, Okapi Wildlife Reserve ஆகிய அனைத்தும் ஆபத்திலுள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
↑ 21.021.121.2The natural site Wadden Sea is shared between Denmark and Panama.
↑பட்டியலிலுள்ள Abu Mena பண்பாட்டுக் களம் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑பட்டியலிலுள்ள இயற்கைக் களமான Simien National Park ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑ 24.024.1The natural site High Coast / Kvarken Archipelago is shared between Finland and Sweden.
↑ 25.025.1The mixed site Pyrénées - Mont Perdu is shared between France and Spain.
↑ 26.026.1The cultural site Stone Circles of Senegambia is shared between Gambia and Senegal.
↑பட்டியலிலுள்ள Bagrati Cathedral and Gelati Monastery, Historical Monuments of Mtskheta ஆகிய இரு பண்பாட்டுக் களங்களும் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
↑ 28.028.128.2The natural site Primeval Beech Forests of the Carpathians and the Ancient Beech Forests of Germany is shared between Germany and the United Kingdom.
↑ 29.029.1The cultural site Frontiers of the Roman Empire is shared between Germany and the United Kingdom.
↑ 30.030.1The cultural site Muskauer Park / Park Mużakowski is shared between Germany and Poland.
↑முன்னர் பட்டியலிலிருந்த Dresden Elbe Valley 2009 இல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
↑பட்டியலிலுள்ள இயற்கைக் களமான Mount Nimba Strict Nature Reserve ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑ 33.033.1The cultural site Historic Centre of Rome, the Properties of the Holy See in that City Enjoying Extraterritorial Rights and San Paolo Fuori le Mura is shared between the Holy See and Italy.
↑பட்டியலிலுள்ள இயற்கைக் களம் Río Plátano Biosphere Reserve ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑ 35.035.1The natural site Caves of Aggtelek Karst and Slovak Karst is shared between Hungary and Slovakia.
↑பட்டியலிலுள்ள இயற்கைக் களம் Tropical Rainforest Heritage of Sumatra ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑பட்டியலிலுள்ள பண்பாட்டுக் களங்களான Ashur (Qal'at Sherqat), Samarra Archaeological City ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
↑ 38.038.1The natural site Monte San Giorgio is shared between Italy and Switzerland.
↑ 39.039.1The cultural site Rhaetian Railway in the Albula / Bernina Landscapes is shared between Italy and Switzerland.
↑பட்டியலிலுள்ள Old City of Jerusalem and its Walls பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑ 41.041.1The natural site Maloti-Drakensberg Park is shared between Lesotho and South Africa.
↑ 42.042.1The cultural site Curonian Spit is shared between Lithuania and Russia.
↑பட்டியலிலுள்ள Rainforests of the Atsinanana இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑பட்டியலிலுள்ள Timbuktu, Tomb of Askia பண்பாட்டுக் களங்கள் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑ 45.045.1The natural site Uvs Nuur Basin is shared between Mongolia and Russia.
↑பட்டியலிலுள்ள Air and Ténéré Natural Reserves இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑முன்னர் பட்டியலிலிருந்த Arabian Oryx Sanctuary 2007 இல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
↑பட்டியலிலுள்ள Birthplace of Jesus: Church of the Nativity and the Pilgrimage Route, Bethlehem, Palestine: Land of Olives and Vines – Cultural Landscape of Southern Jerusalem, Battir பண்பாட்டுக் களங்கள் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
↑பட்டியலிலுள்ள Fortifications on the Caribbean Side of Panama: Portobelo-San Lorenzo பண்பாட்டுக் களம் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑பட்டியலிலுள்ள Chan Chan Archaeological Zone பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑ 52.052.1The cultural site Wooden Tserkvas of the Carpathian Region in Poland and Ukraine is shared between Poland and Ukraine.
↑ 53.053.1The cultural site Prehistoric Rock-Art Sites in the Côa Valley and Siega Verde is shared between Portugal and Spain.
↑பட்டியலிலுள்ள Niokolo-Koba National Park இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑பட்டியலிலுள்ள Medieval Monuments in Kosovo பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑ 56.056.1The natural site Heritage of Mercury. Almadén and Idrija is shared between Slovenia and Spain.
↑பட்டியலிலுள்ள East Rennell இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑பட்டியலிலுள்ள Ancient City of Damascus, Ancient City of Bosra, Site of Palmyra, Ancient City of Aleppo, Crac des Chevaliers and Qal’at Salah El-Din, Ancient Villages of Northern Syria பண்பாட்டுக் களங்கள் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
↑பட்டியலிலுள்ள Selous Game Reserve இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑பட்டியலிலுள்ள Tombs of Buganda Kings at Kasubi பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑பட்டியலிலுள்ள Liverpool – Maritime Mercantile City பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑பட்டியலிலுள்ள Everglades National Park இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑பட்டியலிலுள்ள Coro and its Port பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑பட்டியலிலுள்ள Historic Town of Zabid பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
↑ 65.065.1The natural site Mosi-oa-Tunya / Victoria Falls is shared between Zambia and Zimbabwe.
மேற்கோள்கள்
↑ 1.01.1"World Heritage". UNESCO World Heritage Centre. UNESCO. 1992–2014. Retrieved சூன் 26, 2014.{{cite web}}: CS1 maint: date format (link)