திருநின்றவூர்
திருநின்றவூர் (Thirunindravur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். இது சென்னை மாநகருக்கு வடமேற்கில் உள்ளது. இது சென்னையிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருநின்றவூர் சென்னை பெருநகர பகுதியின் ஓர் அங்கம் ஆகும். இந்நகரில் பக்தவத்சல பெருமாள் கோவில், பூசலார் நாயனார் தம் மனதில் கட்டிய இருதயாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் இந்நகராட்சியினை சுற்றி புதுசத்திரம், கொட்டாம்பேடு, கொசவன்பாளையம், அன்னம்பேடு, நடுக்குத்தகை, நத்தம்பேடு, நிமிலச்சேரி, நாச்சியார் சத்திரம், பாக்கம், கொமக்கம்பேடு போன்ற 16 கிராம ஊராட்சிகள் உள்ளன. மேலும் இந்நகரில் திருநின்றவூர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையத்தினை தினந்தோறும் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். அமைவிடம்சென்னை - திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த திருநின்றவூர் நகராட்சிக்கு மேற்கில் திருவள்ளூர் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு தொடருந்து நிலையம் உள்ளது. திருநின்றவூருக்கு கிழக்கே ஆவடி 9 கி.மீ.; தெற்கே பூவிருந்தமல்லி 16 கி.மீ. தொலைவில் உள்ளது. நகராட்சியின் அமைப்பு11 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 742 தெருக்களையும் கொண்ட இந்நகராட்சி ஆவடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 9,425 வீடுகளும், 37,095 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் எழுத்தறிவு 92.26% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1016 பெண்கள் வீதம் உள்ளனர்.[5] கோவில்கள்திருநின்றவூர் அருள்மிகு பக்தவத்சல பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இதைத் தவிர, இங்கு திரு இரித்யாலீசுவரர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு இன்றும் நன்றாக பராமரிக்கபட்டு வருகிறது. இந்த கோவில்கள் பல்லவர் காலத்தில் கட்டபட்டன. திருநின்றவூர் ஏரி மிகவும் பெரியதாகும். திரு ஏரிகாத்த இராமர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. முற்காலத்தில் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் அருகில் திருமழிசை ஜெகனாநாத சுவாமி திருத்தலமும் அமைந்துள்ளது. பேருந்து வசதிசென்னை மாநகர பேருந்துகளின் விவரம்:
தொடருந்து வசதிசென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை தொடருந்து முனையத்திலிருந்து திருவள்ளூர் , அரக்கோணம் சந்திப்பு, திருத்தணி வரை இயக்கப்படும் அனைத்து புறநகர் மின்சார தொடருந்துகளும் திருநின்றவூர் தொடருந்து நிலையத்தில் நின்று செல்லும். பொழுதுபோக்குதிருநின்றவூரில் இயங்கிவரும் இரண்டு திரைஅரங்குகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia