ஐசிசி ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்
ஐசிசி ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர் (ICC Test Player of the Year) என்பது 2004 ஆம் ஆண்டில் இருந்து அந்தந்த ஆண்டுகளில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும்.இதனை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை வழங்குகிறது. இந்த விருதானது ஆண்டுதோறும் வழங்கப்படும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் விருதுகளில் ஒன்றாகும்.[1] தேர்வுஇந்த விருதானது 56 நபர்கள் கொண்ட அவையின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டில் இதில் 50 நபர்கள் இருந்தனர். இந்த அவையில் தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடும் நாடுகளின் அணியின் தலைவர்கள் 10 பேர், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழுவில் உள்ள 18 பேர் மற்றும் முன்னாள் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் செய்தியாளர்கள் 28 பேர் உள்ளனர். இந்தக் குழுவின் முடிவில் சம நிலை ஏற்பட்டால் விருது பகிந்தளிக்கப்படும். விருது பெற்றவர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia