செட்டிபாளையம்
செட்டிபாளையம் (ஆங்கிலம்:Chettipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும் அமைவிடம்செட்டிபாளையம் பேருராட்சி கோயம்புத்தூருக்கு தெற்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இரண்டாம் நிலை பேருராட்சியாகும். பல்லடம் - கொச்சி இணைப்பு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேருராட்சியில் லார்சன் அன் டியூப்ரோ நிறுவனம் உள்ளது. இதனருகே உள்ள பிற நகரங்கள் பொள்ளாச்சி 35 கி.மீ., திருப்பூர் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 8 கி.மீ. தொலைவில் உள்ள போத்தனூரில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு31.86 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,841 வீடுகளும், 10,366 மக்கள்தொகையும் கொண்டது. [5] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia