திருமலையம்பாளையம்
திருமலையம்பாளையம் (ஆங்கிலம்:Thirumalayampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியின் எல்லை கேரள மாநிலத்தினை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலையே மேற்கொள்கின்றனர். அமைவிடம்இது கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 6 கி.மீ. தொலைவில் உள்ள மதுக்கரையில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு30.65 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,375 வீடுகளும், 12,164 மக்கள்தொகையும் கொண்டது.[4] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia