ஆனைமலை
அமைவிடம்மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த ஆனைமலை பேரூராட்சி, கோயம்புத்தூருலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், பொள்ளாச்சி 14 கி.மீ., உடுமலைப்பேட்டை 30 கி.மீ. தொலைவில் உள்ளன. [4] பேரூராட்சியின் அமைப்பு10.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 114 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,933 வீடுகளும், 17,208 மக்கள்தொகையும் கொண்டது.[6] [7] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 10°35′N 76°56′E / 10.58°N 76.93°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 258 மீட்டர் (846 அடி) உயரத்தில் இருக்கின்றது. தொல்லியல்![]() ஆனைமலைக்கோவில் செல்லும் வழியில் மிகப்பழைமையான அரிய போர்வாட்கள் பத்து கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் 4,500 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சிந்து சமவெளி நாகரிகத் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். [9] மற்ற விவரங்கள்
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia