மேட்டுப்பாளையம் வட்டம்மேட்டுப்பாளையம் வட்டம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக மேட்டுப்பாளையம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை என 2 உள்வட்டங்களும், 19 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] காரமடை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 260,172 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 129,447 ஆண்களும், 130,725 பெண்களும் உள்ளனர். 73,189 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 52.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 78.03% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23023 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 44,149 மற்றும் 8,712 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.91%, இசுலாமியர்கள் 8.9%, கிறித்தவர்கள் 3.88% மற்றும் பிறர் 0.31% ஆகவுள்ளனர்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia