மூப்பேரிபாளையம்
மூப்பேரிபாளையம் (ஆங்கிலம்:Mopperipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விசைத்தறி தொழிற்சாலைகள அதிக அளவில் உள்ளது அமைவிடம்இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே 10 கி.மீ. தொலைவில் உள்ள சோமனூரில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அவிநாசி 18 கி.மீ.; சரவணம்பட்டி 17 கி.மீ.; அன்னூர் 11 கி.மீ.; சூலூர் 18 கி.மீ. தொலைவில் உள்ளன. பேரூராட்சியின் அமைப்பு15 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 71 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,094 வீடுகளும், 10,923 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5] ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia