காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவர கோயில் (வன்னீசம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சியிலுள்ளசிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவ்விறைவரை வன்னீசர் எனும் மற்றொரு பெயருடனும் வழங்கப்படுகிறது. இது, ஒக்கப்பிறந்தான் குளத்திற்கு தெங்கரையில் கிழக்கு பார்த்த சன்னதியாக அறியப்பட்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
அக்னி தேவன் தன்னுடைய மூன்று சகோதரரும் தேவர்கட்கும் ஆவிகளைத் தாங்கும் வன்மையற்று இறந்துபோகத் தானும் பயந்து சிலநாள் சகோர தீர்த்தத்தில் ஒளிந்திருந்து தேவர்களால் வெளிப்பட்டு அவர்கள் வேண்டிக்கொண்ட வண்ணம் ஆவியைத் தாங்கும் வல்லமையைப் பெற பூஜித்தனன்.
அக்னிப் (வன்னி, நெருப்பு) பகவான் இப்பெருமானை வழிபட்டு - முனிவர்கள், தேவர்களால் தரப்படும் அவியுணவுகளைச் சுமக்கும் வல்லமையை பெற்றார் என்பது வரலாறாகும்.[2]
தல விளக்கம்
வன்னீசம் (வன்னி-அக்கினி.) எனும் இது, அக்கினிதேவன்தமையன்மார் மூவர் வேள்வி அவியைச் சுமக்கலாற்றாது இறந்தனர். அது கண்டஞ்சிய அக்கினி ஐயரம்பையர்த்தீர்த்தத்தைப் புகலடைந்து சகோதரனாக ஏற்றுக் காக்கவேண்டி அதனுள் மறைந்து கரந்தனன். தேவர் எங்கும் தேடி முடிவில் (ஒக்கப்பிறந்தான் குளம்) சகோதர தீர்த்தக்கரையை அடைந்து அதன்கண் வாழும் மீன்கள் காட்டிக்கொடுக்கக் கண்டு கூவி அழைக்கும் தேவர்களை முன் போகவிட்டுப் பின்பு மீன்களைத் தூண்டிலிற் படுகெனச் சாபமிட்ட அக்கினி அக்குளக்கரையில் வன்னீசரைத் தாபித்துப் பூசித்து அவிசுமக்கும் ஆற்றலைப் பெற்றேகினன். இவ்விரு தலங்கள் மாண்டகன்னீசர் தெருவில் உள்ள ஒக்கப்பிறந்தான் குளக்கரையில் உள்ளன.[3]
தல பதிகம்
பாடல்: (1) (வன்னீச வரலாறு)
மூதழற் கடவுள் தன்னுடன் பிறந்த முன்னவர் மும்மையர்
உள்ளார், பேதுறா மதுகை மூவரும் விண்ணோர் பெறும்அவி
சுமக்கலாற்றாது, மேதகும் ஆவி இறந்தனர் அதனை விரிதழற்