காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில்
காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் (முப்புராரி கோட்டம்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும், ஈயப்பிள்ளையார் கோயில் மண்டபம் உள்ள; இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1] இறைவர், வழிபட்டோர்தல வரலாறுஇத்தல வரலாற்றில் அறியப்படுவது, எயிற்கோட்டம் என்பது மருவி முறையே ஈயக்கோட்டம் - ஈயக்கோஷ்டம் - ஈயக்கோட்டேசுவரர்கோயில் என்றாகி தற்போது ஈயப் பிள்ளையார்கோயில் மண்டபம் என்பது வழங்குகிறது. திரிபுரத்தவர்களை புத்தன் மயக்கிய காலத்தில், சுசீலன், சுபத்தி, சுதன்மன் ஆகிய மூவரும் மயங்காது இருந்து சிவபெருமானைத் துதித்து நின்றனர்; இறைவன் காட்சி தந்து யாதென வினம்ப, மூவரும் இறைவனின் கோயில் வாயில்காக்கும் பணியை வேண்டி நின்றனர். இறைவனும் அவர்களை காஞ்சிக்கு சென்று தம்மை வழிபடுமாறு பணித்தார். அவர்கள் மூவரும் அவ்வாறே காஞ்சிக்கு சென்று முப்புராரீசன் என்ற திருப்பெயரில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டு பேறடைந்தனர் என்பது தல வரலாறு.[2] அமைவிடம்தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியில் 'கீழம்பி' செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[3] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia