காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் (கங்கணேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ளசிவக்கோயில்களில் ஒன்றாகும். இச்சந்நிதியின் மூலவர் அறை சுமார் 15-அடி பாதாளத்தில் உள்ளதால், மக்கள் இச்சிவலிங்கத்தை பாதாளீஸ்வரர் என்று வழங்குகின்றனர். மேலும், இவ்விறைவரை அம்பிகை வழிபட்டதாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
தல பெருமை
பெரிய காஞ்சிபுரம் சின்னகம்மாளத் தெருவில் கிழக்கு பார்த்த சன்னதியாக உள்ள இது, பாதாளேஸ்வரர் கோவில் என வழங்கப்படுகிறது. இது காமாட்சி அம்மையார் ஏகாம்பரநாதரை வழிபடுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்ட தலமாகும். கங்கணதீர்த்தம் (குளம்) எதிரில் மறைக்கப்பட்டிருக்கிறது.[2]
தல வரலாறு
அம்பிகைசிவபெருமானை வழிபட வேண்டி, காஞ்சியை அடைந்து, சிவலிங்கப் பிரதிட்டை செய்து, அவ்விறைவனை வழிபட்டு, பொன்னாலான காப்புநாணை (கங்கணம்) அணிந்து கொண்டார். அதுவே கங்கணேசம் எனப் பெயர் பெற்றதாக வரலாறு.[3]
தல பதிகம்
பாடல்: (கங்கண தீர்த்தம் கங்கணேச்சரம்)
அலங்கொளிக் கரத்துச் செம்பொற் காப்புநாண் அணிந்து மூவா
இலிங்கம்ஆண் டிருவிப் பூசை இயற்றினாள் அனைய தீர்த்தம்