காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் (மத்தளமாதவேசம்) என்றழைக்கும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். இச்சிவலிங்கம், காஞ்சி திருவேகம்பத்தின் முதல் பிராகர வடபாகத்தில் அமைந்துள்ளது. மேலும், திருமால் வழிப்பட்டதாக கருதப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1] தல சிறப்புமாதவராகிய திருமால், தில்லையில் திருநடனங்கண்ட காலத்தில் நந்தியாதியர்போல் தாமும் மத்தளம் முழக்கவேண்டும் என்று நடராசப்பெருமானை வேண்ட அவர் நீ வேண்டிய இதனை பெறவேண்டுவையாயின் காஞ்சிய்ன் கண் சிவலிங்கப் பிரதிட்டை செய்து இவ்வரம்பெற்று இங்கு வந்து மத்தளம் முழக்குவாய் என்று அருள அவ்வண்ணமே வந்து பூசித்தனர்.[2] தல வரலாறுதில்லைத் திருநடனம் கண்ட திருமால், இறைவனின் நடனத்திற்கு தான் மத்தளம் வாசிக்க வேண்டும் என்று விரும்பி இறைவனை வேண்டினார். இறைவனார் காஞ்சியை அடைந்து தம்மை வழிபடுமாறு பணித்தார். திருமாலும் காஞ்சியை அடைந்து மத்தள மாதவேசர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டார். அப்போது இறைவன் தோன்றி காப்பு நடனமாடி அருள்புரிய திருமால் அந்நடனத்திற்கு மத்தளம் வாசித்து மகிழ்ந்தார் என்பது வரலாறாகும்.[3] தல பதிகம்
அமைவிடம்இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் காஞ்சி திருவேகம்பத்தின் உள்பிரகாரத்தில் ஆறுமுகர் சந்தியை அடுத்துள்ள மார்க்கண்டேய லிங்கத்திற்கு பக்கத்தில் உள்ள சிவலிங்கமே மத்தள மாதவேசம் ஆகும். மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்ப அகத்தில் மத்தள மாதவேசம் சிவலிங்கமாக தாபிக்கப்பட்டுள்ளது.[5] போக்குவரத்து
மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia