காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் (கள்ளக்கம்பம்) என வழங்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ளசிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவரை வழிபடுவோர் கொடிய வினைமயக்கத்துள் அகப்படார். மற்றும், உலகை மயக்க விரும்பி மாயவன் பூசித்தமையால் இது கள்ளக்கம்பம் எனவாயிற்று. இக்கோயில் குறிப்புகள்; காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் முதல் பிரகாரத்தில் ஏகாம்பரநாதருக்கு வலப்பக்கம் வெள்ளக்கம்பர், இடப்பக்கம் கள்ளக்கம்பர், ஈசானத்தில் நல்லகம்பர், என வீற்றிருக்கிறார்கள்.
சிவபெருமான்கச்சி மயானத்தின் கண் சைவ வேள்வி செய்து முடித்தபின்னர் சிவ சகி லலிதாதேவி என்னும் திருநாமம் கொண்டு வெளிப்பட்டு யாவும் படைக்கத் தொடங்கியபொழுது அவரது முக்கண்ணிலும் தோன்றிய மும்மூர்த்திகளுள் கள்ளக்கம்பரும் ஒருவர்.
வெள்ளக் கம்பர் : பிரமன் வெள்ளை (தூய) உள்ளத்தோடும் பூசனை புரிந்தமையின், இப்பெயரைத் தாங்கினார். பிறவியாம் அழுக்குடம்பு போய்த் தூயராவர். இவர் மூல இலிங்கத்திற்கு வலப்புறத்தே கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றனர். (திருவே. 86)
கள்ளக் கம்பர் : திருமால் உயிர்களை மயக்குறுத்த வழிபட்டமையின் அப்பெயர் ஏற்றனர். இவரை வணங்குவோர் மாலாரின் மயக்குட்படார். அம்மையார் வழிபட்ட மூலஇலிங்கத்திற்கு வடக்கில் உள்ளது இத்தலம். (திருவே. 87)
நல்ல கம்பர் : உருத்திரர் வழிபட்டு போற்ற ஒன்றி நின்றனர். அவரை அன்பொடும் வழிபடுவோர் ஒன்றி ஒன்றா நிலையை எய்துவர். திருவேகம்பர் திருமுன்பு நிலாத்துண்டப் பெருமாளுக்கு அயலே மேற்கு நோக்கி வீற்றிருப்பர். (திருவே. 88)[3]
தல பதிகம்
பாடல்: (கள்ளக் கம்பர்)
மருள்புரி கருத்தினான் மாயன் ஏத்தலின்
கருதும்அப் பெயரிய கள்ளக் கம்பனைத்
திருவடி வழிபடப் பெற்ற சீரியோர்
உருகெழு கொடுவினை மைய லுட்படார்.
பொழிப்புரை:
திருமால் மயக்குறுத்தும் கருத்தொடும் வழிபடலால் விளங்கும் கள்ளக்