காலியம் இண்டியம் ஆண்டிமோனைடுகாலியம் இண்டியம் ஆண்டிமோனைடு (Gallium indium antimonide) என்பது GaInSb என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவ்ரிக்கப்படும் மூன்றாம் நிலை III-V குறைக்கடத்தி சேர்மமாகும். இண்டியம் காலியம் ஆண்டிமோனைடு (InGaSb) என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. காலியம் ஆண்டிமோனைடு மற்றும் இண்டியம் ஆண்டிமோனைடு ஆகியவற்றுக்கிடையிலான கலப்புலோகமாகவும் இது பார்க்கப்படுகிறது. காலியம் மற்றும் இண்டியம் இடையே எந்த விகிதத்தையும் இந்த கலப்புலோகம் கொண்டிருக்கலாம். GaInSb என்பது பொதுவாக எந்த ஒரு விகிதத்தினாலான உலோகக் கலவையையும் குறிக்கிறது. தயாரிப்புகாலியம் இண்டியம் ஆண்டிமோனைடு படிகங்கள் மூலக்கூற்று கற்றை படிகவளர்ச்சி முறை,[1]வேதிக் கற்றை படிகவளர்ச்சி முறை,[2] நீர்மநிலை படிகவளர்ச்சி [3]வகைகள் மூலம் காலியம் ஆர்சனைடு மற்றும் ஆண்டிமோனைடு அடிமூலக்கூறுகள் மீது காலியம் இண்டியம் ஆண்டிமோனைடு படிகங்கள் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலும் மற்ற III-V சேர்மங்களுடன் அடுக்கு பல்லுருவ கட்டமைப்புகளுடன் இணைக்கப்படுகிறது. மின்னணு பண்புகள்![]() காலியம் இண்டியம் ஆண்டிமோனைடு உலோகக் கலவைகளின் ஆற்றல் இடைவெளியும் அணிக்கோவை மாறிலியும் தூய நிலை காலியம் ஆண்டிமனி (a = 0.610 நானோமீட்டர், Eg = 0.73 எலக்ட்ரான் வோல்ட்டு) அளவாகவும், தூய நிலை இண்டியம் ஆண்டிமணி (a = 0.648 நானோமீட்டர், Eg = 0.17 எலக்ட்ரான் வோல்ட்டு) அளவாகவும் உள்ளன.[4][6] அனைத்து பகுதிக்கூறுகளும் சுத்தமான GaSb மற்றும் InSb கலப்பில் உள்ளது போல ஆற்றல் இடைவெளி நேர்மறையாக உள்ளது. பயன்பாடுகள்காலியம் இண்டியம் ஆண்டிமோனைடு போன்ற பல்லுருகட்டமைப்புகள் கொண்ட சேர்மங்கள் அருகாமையில் இருந்து நடுத்தரத் தொலைவு அகச்சிவப்பு ஒளியுணரிகள்,[7][8][9] திரிதடையங்கள்,[10][11] ஆல் விளைவு உணரிகள் [12] ஆகியவற்றில் பயன்படுத்தப்படுத்த ஆய்வில் உள்ளன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia