காலியம் (II) சல்பைடு
காலியம் (II) சல்பைடு (Gallium(II) sulfide) என்பது GaS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். காலியம் மற்றும் கந்தகம் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. Ga-Ga பிணைப்பு[1] இடைவெளி 248 பைக்கோ மீட்டர் நீளமுள்ள Ga24+ அலகுகளைக் கொண்ட அறுகோண அடுக்கு கட்டமைப்பிலிருந்து சாதாரண நிலை காலியம் (II) சல்பைடு உருவாக்கப்படுகிறது. இத்தகைய அடுக்கு கட்டமைப்புகளை GaTe, GaSe மற்றும் InSe [1]சேர்மங்களில் காணமுடியும். இயல்புக்கு மாறான சிற்றுறுதி நிலைப்புத்தன்மையுடைய உருக்குலைந்த உர்ட்சைட் வடிவ காலியம் (II) சல்பைடை கரிமவுலோக வேதியியல் ஆவிப்படிவு முறையைப் பயன்படுத்தி தயாரித்தார்கள். இரண்டு-மூன்று-பியூட்டைல் காலியம் இருதையோ கார்பமேட்டுகள் கரிமவுலோக முன்னோடிகளாக இருந்தன. உதாரணமாக GaAs மீது GatBu2(S2CNMe2) மேலொழுங்கு செய்யப்பட்டது. இம்முறையில் உருவான காலியம் (II) சல்பைடின் கட்டமைப்பு உண்மையெனக் கொள்ளத்தக்க Ga2+ S2− வடிவமாக உள்ளது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia