இண்டியம்(I) புரோமைடு
இண்டியம்(I) புரோமைடு (Indium(I) bromide) என்பது InBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியமும் புரோமினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் சிவப்பு நிறத்தில் படிகச்சேர்மமாக காணப்படுகிறது. β-தாலியம் அயோடைடு கட்டமைப்பையொத்த சமகட்டமைப்புடனும் திரிபடைந்த பாறை உப்பு அமைப்பையும்[1] இண்டியம்(I) புரோமைடு கொண்டிருக்கிறது. இண்டியம் உலோகத்தை இண்டியம் டிரைபுரோமைடு எனப்படும் இண்டியம் முப்புரோமைடுடன் சேர்த்து சூடுபடுத்தும்பொழுது இண்டியம்(I) புரோமைடு உருவாகிறது. இச்சேர்மம் கந்தக விளக்கில் பயன்படுத்தப்படுகிறது. கரிம வேதியியலில், α, α-இருகுளோரோகீட்டோன்களை 1-அரைல்-பியூட்டேன்-1,4-டையோன்களாக்கும்[2] இணைப்பு வினைகளை இச்சேர்மம் முன்நகர்த்துகிறது. ஆல்க்கைல் ஆலைடுகளை ஆல்க்கைல் இண்டியம் ஆலைடுகளாகவும்[3], நிக்கல்புரோமின் அணைவுச்சேர்மங்களை நிக்கல்-இண்டியம் பிணைப்புகளாகவும் மாற்றுவது போன்ற ஆக்சிசனேற்ற கூட்டுவினைகளில் இண்டியம்(I) புரோமைடு பங்களிக்கிறது[4]. தண்ணீரில் நிலைப்புத்தன்மை இல்லாமல் இண்டியம் உலோகமாகவும் இண்டியம் முப்புரோமைடாகவும் சிதைகிறது. இண்டியம் இருபுரோமைடு தண்ணீரில் கரைந்து உண்மையென கருதத்தக்க, நீரில் கரையாத வீழ்படிவாக உருவாகி உடனடியாகசிதைவடைகிறது[5]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia