இண்டியம்(III) புரோமைடு அல்லது இண்டியம் முப்புரோமைடு( Indium(III) bromide or indium tribromide) என்பது InBr3, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இலூயிக் அமிலமாகச் செயல்படும் இச்சேர்மம் கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது[2]
அமைப்பு
அலுமினியம் முக்குளோரைடின் படிக அமைப்பைப் போன்று ஆறு ஒருங்கிணைவு இண்டியம்அணுக்கள் கொண்ட படிக அமைப்பில் இண்டியம்(III) புரோமைடு அமைந்துள்ளது[3] . உருகிய நிலையில் இருக்கும் போது இது இருபடியாகக் (In2Br6), காணப்படுகிறது மற்றும் வாயுநிலையில் இருபடியாக மேலாதிக்கம் செலுத்துகிறது. இவ்விருபடியில் புரோமின் அணுக்கள் அலுமினியம் முக்குளோரைடில் உள்ளது போலவே (Al2Cl6 ) பாலமிடுகின்றன[3]
இண்டியம் உலோகத்துடன் வினைபுரிந்து தாழ்விணைதிற புரோமைடுகளை , InBr2, In4Br7, In2Br3, In5Br7, In7Br9 , இண்டியம்(I) புரோமைடு உருவாக்குகிறது. [5][6][7][8]மீள்கின்ற சைலீன்கரைசலில் InBr3 மற்றும் இண்டியம் உலோகம் ஆகியன வினைபுரிந்து InBr2 உருவாகிறது[9]
மேற்கோள்கள்
↑
Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–61, ISBN0-8493-0594-2
↑Thirupathi, Ponnaboina; Kim, Sung Soo (2009). "InBr3: A Versatile Catalyst for the Different Types of Friedel−Crafts Reactions". The Journal of Organic Chemistry74 (20): 7755–7761. doi:10.1021/jo9014613. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263.
↑Staffel, Thomas; Meyer, Gerd (1987). "The mono-, sesqui-, and dibromides of indium: InBr, In2Br3, and InBr2". Zeitschrift fur anorganische und allgemeine Chemie552 (9): 113–122. doi:10.1002/zaac.19875520913. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313.