கால்சியம் பெர்குளோரேட்டு
கால்சியம் பெர்குளோரேட்டு (Calcium perchlorate) என்பது Ca(ClO4)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓர் உலோக பெர்குளோரேட்டு உப்பாகவும் வெடிக்கும் வினைத்திறம் கொண்டதாகவும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. தோற்றத்தில் மஞ்சள்-வெள்ளை நிறத்தில் படிக திடப்பொருளாகக் காணப்படுகிறது. ஒரு வலிமையான ஆக்சிசனேற்ற முகவராக, வெப்பம் மற்றும் வாயுவாக இருக்கும் பொருட்களை உருவாக்க சூடேற்றும்போது குறைக்கும் முகவர்களுடன் இது வினைபுரிகிறது. கால்சியம் பெர்குளோரேட்டு மூடிய கொள்கலன்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரகத்தின் மண்ணில் ஒரு பொதுவான இரசாயனமாக உள்ளது. செவ்வாய் கிரகத்தின் தூசியில் கிட்டத்தட்ட 1% எடையாகவும் கணக்கிடப்படுகிறது. பண்புகள்கால்சியம் பெர்குளோரேட்டு ஒரு வலுவான கனிம ஆக்சிசனேற்ற முகவராகும். வெடிப்புக்கு வழிவகுக்கும் பிற பொருட்களின் எரிப்பை இது அதிகரிக்கிறது. பெர்குளோரேட்டு அயனி ClO4- சமச்சீர் நான்முகி அமைப்பைக் கொண்டுள்ளது. குறைந்த எலக்ட்ரான்-தானம் செய்யும் புரோட்டான்-ஏற்றுக்கொள்ளும் சக்தி மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த முனைவாக்கம் மூலம் கரைசலில் வலுவாக உறுதிப்படுத்தப்படுகிறது. குறை உருகுநிலைத் திட்டம்கால்சியம் பெர்குளோரேட்டு கரைசல் ஓர் எளிய குறை உருகுநிலைத் திட்ட அமைப்பை உருவாக்குகிறது. கால்சியம் பெர்குளோரேட்டு கரைசலின் குறை உருகுநிலைச் சேர்மம் 4.2 மோல் / 1000 கிராம் நீர் ஆகும். இது இசுட்ரோன்சியம் மற்றும் பேரியத்தின் நெருங்கிய தொடர்புடைய உலோக நேர்மின் அயனி பெர்குளோரேட்டுகளின் கலவையை மிகவும் ஒத்திருக்கிறது.[2][3] தோற்றம்மின்பகுளி மின் கடத்துத்திறன்கரிமக் கரைப்பான் அசிட்டோநைட்ரைலில் Ca(ClO4)2 மற்றும் இரட்டை மின்னேற்ற உலோக நேர்மின் அயனிகளின் மின்பகுளி மின் கடத்துத்திறன் சோதிக்கப்பட்டது.[4] குறிப்பிட்ட உடனொளிர்வு குறிகாட்டிகளின் மிகை வளர்ச்சியின் காரணமாக ஒளியுணரி ஈந்தணைவிகளுடன் உலோக நேர்மின் அயனிகளின் பெர்குளோரேட்டு தொடர்புகளில் ஆர்வம் அதிகரித்துள்ளது. தயாரிப்புபெர்குளோரேட்டு உப்புகள் ஒரு காரமும் பெர்குளோரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகும் சேர்மமாகும். கால்சியம் கார்பனேட்டையும் அம்மோனியம் பெர்குளோரேட்டையும் சேர்த்து கலவையை சூடாக்குவதன் மூலம் கால்சியம் பெர்குளோரேட்டைத் தயாரிக்கலாம். அம்மோனியம் கார்பனேட்டு வாயு நிலையில் உருவாகி, கால்சியம் பெர்குளோரேட்டை திடப்பொருளாக விட்டுச்செல்கிறது.[5][6] வினைகள்நீர்அதிக நீருறிஞ்சும் பண்பைக் கொண்டிருப்பதால் கால்சியம் பெர்குளோரேட்டு பொதுவாக நான்கு நீர் மூலக்கூறுகளின் முன்னிலையில் காணப்படுகிறது. இது கால்சியம் பெர்குளோரேட்டு நான்குநீரேற்று Ca(ClO4)2·4H2O என குறிப்பிடப்படுகிறது.[1] வளைய ஐதரசன்பாசுபோனேட்டுடையாக்சாபாசுபோகேன்கள், எட்டு உறுப்பு வளைய ஐதரசன்பாசுபேனேட்டு, கால்சியம் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் ஒரு கலப்பின கரிம-கனிம மூலக்கூறு உருவாக்கிறது. கால்சியம் பெர்குளோரேட்டில் இருந்து கால்சியம் சில்படிம மூலக்கூறின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டிற்கு பங்களிக்கிறது. நான்கு கால்சியம் அயனிகள் நான்கு டையாக்சாபாசுபோகேன் பகுதிகளுக்கு இடையில் இணைக்கப்பட்டுள்ளது.[7] நச்சுத்தன்மைகால்சியம் பெர்குளோரேட்டு தூசித் துகள்களை உட்கொள்வதன் மூலமோ அல்லது உள்ளிழுப்பதன் மூலமோ அல்லது குறைவாகத் தோலுடன் தொடர்பு கொள்வதன் மூலமோ மனிதர்களுக்குச் சிறிது நச்சுத்தன்மையை அளிக்கிறது.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia