கால்சியம் சயனமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் சயனமைடு
வேறு பெயர்கள்
சயன்மைடு கால்சியம் உப்பு, சுண்ணாம்பு நைட்ரசன், யூ.என் 1403, நைட்ரோலைம்
இனங்காட்டிகள்
156-62-7 Y
ChemSpider
10669887 Y 21106503 N
EC number
205-861-8
InChI=1S/CN2.Ca/c2-1-3;/q-2;+2
N Key: MYFXBBAEXORJNB-UHFFFAOYSA-N
N InChI=1/CN2.Ca/c2-1-3;/q-2;+2 Key: MYFXBBAEXORJNB-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள்
Image Image
பப்கெம்
4685067
வே.ந.வி.ப எண்
GS6000000
[Ca+2].N#CN
[Ca+2].[N-2]C#N
UNII
ZLR270912W Y
UN number
1403
பண்புகள்
CaCN2
வாய்ப்பாட்டு எடை
80.102 கி/மோல்
தோற்றம்
வெண்மையான திண்மம் (மாசுநிலையில்,பெரும்பாலும் சாம்பல் அல்லது கருப்பு நிறம்)
மணம்
மணமற்றது
அடர்த்தி
2.29 கி/செ.மீ3
உருகுநிலை
1,340 °C (2,440 °F; 1,610 K)[ 1]
கொதிநிலை
1150 முதல் 1200 செ (நேரடியாக ஆவியாகும்)
வினைபுரியும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்
ICSC 1639
ஈயூ வகைப்பாடு
தீங்கானது (Xn ) எரிச்சலை உண்டாக்கும் (Xi )
S-சொற்றொடர்கள்
(S2) S22 S26 S36/37/39
தீப்பற்றும் வெப்பநிலை
எளிதில் தீப்பற்றாது
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[ 2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 மி.கி/மீ3
உடனடி அபாயம்
N.D.[ 2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
கால்சியம் சயனமைடு (Calcium cyanamide) என்பது CaCN2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . கால்சியம் வழிப்பொருளான சயனமைடு (CN2 2- ) ஒரு உரமாகப் பயன்படுகிறது[ 3] . இச்சேர்மம் 1898 ஆம் ஆண்டு முதன்முதலில் அடோல்பு பிராங்க் மற்றும் நிக்கோடெம் கரோ ஆகியோரால் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது. இச்செயல்முறை பிராங்க் – கரோ செயல்முறை என்று அழைக்கப்படுகிறது[ 4] . கால்சியம் சயனமைடு வர்த்தகத் துறையில் நைட்ரோலைம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
கால்சியம் கார்பைடில் இருந்து கால்சியம் சயனமைடு தயாரிக்கப்படுகிறது. கார்பைடு தூளை மின்னுலையில் இட்டு பலமணி நேரம் நைட்ரசன் வாயுவைச் செலுத்தியபடி[ 5] சுமார் 1000 பாகை செ வெப்பநிலைக்கு சூடாக்கினால் கால்சியம் சயனமைடு கிடைக்கிறது. விளைபொருளை சூழல் வெப்பநிலைக்கு குளிரவைத்து வினையில் ஈடுபடாமல் எஞ்சியிருக்கும் கார்பைடு தண்ணீர் மூலமாக எச்சரிக்கையுடன் வெளியேற்றப்படுகிறது.
CaC2 + N2 → CaCN2 + C (ΔHƒ°= –69.0 kcal/mol at 25 °C)
இவ்வினை பெரிய எஃகு கொள்கலன்களில் மேற்கொள்ளப்படுகிறது. மின்னேற்றம் பெற்ற கார்பன் வினைப்படுபொருள்களை சிவக்கும் அளவிற்கு சூடாக்குகிறது. வளிமண்டல அழுத்தம் 2 என்ற அளவில் நைட்ரசன் வாயு உட்செலுத்தப்படுகிறது.
R3m இடக்குழு மற்றும் a = 3.67, c = 14.85 (.10−1 nm) என்ற சட்டகமாறிலி மதிப்புகளுடன் கால்சியம் சயனமைடு அறுங்கோண வடிவத்தில் படிகமாகிறது .[ 6] [ 7]
பயன்கள்
விவசாயத்தில் உரமாகப் பயன்படுவதுதான் கால்சியம் சயனமைடின் முக்கியமான பயனாகும்.[ 3] . இது நீருடன் சேர்ந்து சிதைவடைந்து அமோனியாவை வெளியேற்றுகிறது
CaCN2 + 3 H2 O → 2 NH3 + CaCO3
சோடியம் கார்பனேட்டுடன் இணைத்து சோடியம் சயனைடு தயாரிக்கவும் கால்சியம் சயனமைடு உதவுகிறது.
CaCN2 + Na2 CO3 + 2C → 2 NaCN + CaO + 2CO
தங்கச் சுரங்கத்தில் சயனைடு செயல்முறையில் இச்சோடியம் சயனைடு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது கால்சியம் சயனைடு மற்றும் மெலாமைன் முதலியனவற்றைத் தயாரிக்கவும் பயன்படுகிறது.
கால்சியம் சயனமைடை நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுத்தினால் சயனமைடு உருவாகிறது.
CaCN2 + H2 O + CO2 → CaCO3 + H2 NCN
இவ்வேதி மாற்றம் பெரும்பாலும் நீர்மக் குழம்பு நிலையிலேயே நிகழ்த்தப்படுகிறது. ஆதலால் வர்த்தகத்திலும் இது நீர்த்த கரைசலாகவே விற்பனை செய்யப்படுகிறது.
கார்பன் டை ஆக்சைடு முன்னிலையில் [ 5] . கால்சியம் சயனமைடுடன் ஐதரசன் சல்பைடைச் சேர்த்து வினை புரிய வைப்பதால் தையோ யூரியா தயாரிக்கலாம்.
எஃகு தயாரிப்பின் போது எஃகுடன் நைட்ரசனைச் சேர்த்து உலோகக் கலவை தயாரிக்கும் வினையிலும் கால்சியம் சயனமைடு உதவுகிறது
மேற்கோள்கள்
↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals . McGraw-Hill, 2002, ISBN 0-07-049439-8
↑ 2.0 2.1 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0091" . National Institute for Occupational Safety and Health (NIOSH).
↑ 3.0 3.1 Auchmoody, L.R.; Wendel, G.W. (1973). "Effect of calcium cyanamide on growth and nutrition of plan fed yellow-poplar seedlings" . U.S. Department of Agriculture, Forest Service. Archived from the original on 2009-08-25. Retrieved 2008-07-18 . {{cite web }}
: CS1 maint: multiple names: authors list (link )
↑ "History of Degussa: Rich harvest, healthy environment" . Retrieved 2008-07-18 .
↑ 5.0 5.1 Thomas Güthner (2006). "Cyanamides". Ullmann's Encyclopedia of Industrial Chemistry . Weinheim: Wiley-VCH .
↑ F. Brezina, J. Mollin, R. Pastorek, Z. Sindelar. Chemicke tabulky anorganickych sloucenin (Chemical tables of inorganic compounds ). SNTL, 1986.
↑ Vannerberg, N.G. "The crystal structure of calcium cyanamide" Acta Chemica Scandinavica (1-27,1973-42,1988) (1962) 16, p2263-p2266
இவற்றையும் காண்க
வெளி இணைப்புகள்