கால்சியம் நைட்ரைடு
கால்சியம் நைட்ரைடு (Calcium nitride) என்பது Ca3N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். பல்வேறு வடிவங்களில் (சமவளவு) காணப்பட்டாலும் α- கால்சியம் நைட்ரைடு பொதுவாகக் கிடைக்கிறது. அமைப்புα-கால்சியம் நைட்ரைடு, மாங்கனீசு இரும்பு ஆக்சைடு கனிமமான பிக்சுபைட்டு கனிமத்தின் எதிர் வடிவமைப்பை ஏற்றுள்ளது. Mn2O3 சேர்மத்தின் அமைப்பைப் போல ஆனால் அயனிகளின் இருப்பிடங்கள் அதனிலிருந்து மாறுபட்டு தலைகீழாக அமைந்திருக்கும். கால்சியம் (Ca2+) அயனிகள் ஆக்சைடின் (O2−) இடத்திலும் நைட்ரைடு (N3−) அயனிகள் மாங்கனீசு அயனிகளின் (Mn3+) இருப்பிடத்திலும் மாறுபட்டுக் காணப்படுகின்றன. இவ்வமைப்பில் Ca2+ நான்முகத் தளங்களிலும் நைட்ரைடு மையங்கள் இரண்டு வேறுபட்ட எண்முக தளங்களிலும் ஆக்ரமித்துள்ளன[1] தயாரிப்பு மற்றும் வினைகள்கால்சியம் காற்றில் எரியும்போது உருவாகும் கால்சியம் ஆக்சைடுடன் சேர்ந்து கால்சியம் நைட்ரைடு உருவாகிறது. மற்றும் பகுதிப்பொருட்கள் நேரடியாக வினைபுரியும் போதும் கால்சியம் நைட்ரைடு உருவாகிறது.[2]
கால்சியம் நைட்ரைடு தண்ணீருடன் வினைபுரிந்து அல்லது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அமோனியா மற்றும் கால்சியம் ஐதராக்சைடு சேர்மங்களைக் கொடுக்கிறது.:[3]
சோடியம் ஆக்சைடு போலவே கால்சியம் நைட்ரைடும் 350 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் ஐதரசனை ஈர்த்துக் கொள்கிறது.
மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia