கால்சியம் ஆக்சைடு, கால்சியம் கார்பனேட்டு முதலிய சேர்மங்கள் ஐதரோ புரோமிக் அமிலத்துடன் வினைபுரிவதால் கால்சியம் புரோமைடு உருவாகிறது. தனிமநிலை கால்சியத்தை தனிமநிலை புரோமினுடன்[1]
சேர்த்தும் இதைத் தயாரிக்க முடியும்.
எண்முக கால்சியம் மையத்துடன் ஆறு புரோமைடு எதிரயனிகள் பிணைந்துள்ள ரூட்டைல் என்ற கனிமத்தின் வடிவமைப்பை இச்சேர்மம் ஏற்றுள்ளது. இதிலுள்ள புரோமைடு அயனிகள் மற்ற கால்சியம் மையங்களுடனும் இணைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
காற்றில் வலிமையாகச் சூடாக்கும்போது கால்சியம் புரோமைடு, கால்சியம் ஆக்சைடு மற்றும் புரோமின் ஆகியனவற்றைத் தருகிறது.
2 CaBr2 + O2 → 2 CaO + 2 Br2
காற்று, இவ்வினையில் புரோமைடை புரோமினாக ஆக்சிசனேற்றம் செய்கிறது.
பயன்கள்
அடர்ந்த நீர்மக்கரைசலான இச்சேர்மம் துளையிடும் பாய்மமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது மேலோட்டமான உளவியல் நோய்களுக்கான மருந்து மருத்துவத்திலும், உறை கலவையாகவும், உணவு பாதுகாப்புப் பொருளாகவும் , புகைப்படக்கலை மற்றும் தீத்தடுப்பானாகவும்[2] பயன்படுகிறது.
மேற்கோள்கள்
↑Michael J. Dagani, Henry J. Barda, Theodore J. Benya, David C. Sanders “Bromine Compounds” Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a04_405