கால்சியம் அயோடேட்டு
கால்சியம் அயோடேட்டு (Calcium iodate) என்பது Ca(IO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கால்சியம் இரட்டையூட்ட நேரயனியும் அயோடேட்டு எதிரயனியும் சேர்ந்து இந்தக் கனிம வேதியியல் சேர்மம் உருவாகிறது. நிறமற்ற உப்பான இச்சேர்மம் இயற்கையில் லாவுடரைட் என்ற கனிமமாக சிலியில் உள்ள அடகாமா பாலைவனத்தில் கிடைக்கிறது[1] தயாரிப்பு மற்றும் வினைகள்கால்சியம் அயோடைடின் நேர்மின்முனை ஆக்சிசனேற்றம் வழியாக கால்சியம் அயோடேட்டைத் தயாரிக்க முடியும் அல்லது அயோடின் கரைந்துள்ள நீர்த்த சுண்ணாம்புக் கரைசல் வழியாகக் குளோரினைச் செலுத்துவதன் மூலமும் இதைத் தயாரிக்க முடியும். பயன்கள்வர்த்தக நோக்கிலான அயோடின் சேர்மங்களுக்கு இது ஒரு முன்னோடியாக விளங்குகிறது. தாதுப் பொருட்களை ஒடுக்குதல் என்ற மரபுவழி உலோகவியல் செயல்முறையில் நீர்த்த விளைபொருட்கள் சோடியம் பைசல்பைட்டுடன் சேர்க்கப்பட்டால் அங்கு சோடியம் அயோடைடு உருவாகிறது. விகிதச்சம பொதுவாதல் வினையின் வழியாக சோடியம் அயோடைடு அயோடேட்டு உப்புடன் சேர்ந்து தனிமநிலை அயோடினை உற்பத்தி செய்கிறது[1]. கோழிப்பண்ணைகளில் கோழிகளுக்கான அயோடின் துணைவுணவாக இது கோழிகளுக்குக் கொடுக்கப்படுகிறது[1]. குழைமம் மற்றும் மேற்பூச்சுக் களிம்புகளில் நாற்றம் நீக்கியாகவும் கிருமிநாசினியாகவும் கால்சியம் அயோடைடு பயன்படுகிறது[2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia