காளப்பநாயக்கன்பட்டி
காளப்பநாயக்கன்பட்டி (Kalappanaickenpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிக்கு தெற்கே 20 கி.மீ. தொலைவில் நாமக்கல்; வடக்கே 18 கி.மீ. தொலைவில் இராசிபுரம், கிழக்கில் 45 கி.மீ. தொலைவில் கொல்லிமலை; மேற்கில் 10 கி.மீ. தொலைவில் புத்தன்துறை உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு6.80 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 30 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,164 வீடுகளும், 10,831 மக்கள்தொகையும் கொண்டது.[4] வரலாறுகாளப்பநாயக்கன் பட்டி, நாயக்கர் ஆட்சி காலத்தில் சேந்தமங்கலம் பகுதியை ஆட்சி செய்த ராமச்சந்திர நாயக்கர் என்பவரின் ஆட்சி எல்லைக்கு உட்பட்டது . . இவ்வூர் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது. 700 வருடம் முன்பு இங்கு குடியமர்ந்த நாயக்கர் சமுதாய மக்கள் இப்பகுதிக்கு வந்து தங்களை குடியமர்த்திகொண்டனர். இவர்கள் இங்குள்ள காடுகளை அழித்து ஊர் அமைத்து வந்தனர் என்றும் , அதன் பின்னர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் வளஞ்சியர் என்ற கவரா நாயக்கர் சமுதாய மக்களும் குடியமர்ந்தனர் என்று சொல்லபடுகின்றது . காளப்ப நாயக்கர்நாயக்கர் இனத்தில் தோன்றிய ஒரு இளைஞர் , கொல்லிமலையில் வாழ்ந்த ஒரு பழங்குடி பெண்ணை காதலித்து வந்ததாகவும் , இக்காதல் இங்குள்ள நாயக்கர் மக்களுக்கு தெரிந்து அந்த இளைஞர் மற்றும் பழங்குடி பெண்ணையும் கொன்று விட்டதாகவும்,அப்பழங்குடி பெண் கொடுத்த சாபத்தால் நாயக்கர் மக்கள் பலர் இறந்ததாகவும் , இதனை போக்க அவரை வழிபட்டும், இவ்வூருக்கு காளப்ப நாயக்கர் பட்டி என்று இவருடைய பெயரிலேயே ஊர் அமைந்து விட்டது என்று கூறுகிறார்கள் .இங்குள்ள வளஞ்சியர் என்ற நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பொருளாதார நிலையில் நன்கு வளர்ந்துள்ளனர். இவ்வூர் இயற்கை அழகுடன் உள்ளது, கருமலை, கொல்லிமலை போன்ற மலைகளில் இருந்துவரும் நீரினால் விவசாயம் செழிப்புடன் அமைகிறது . மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia