நாமகிரிப்பேட்டை
நாமகிரிப்பேட்டை (Namagiripettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நாமகிரிப்பேட்டை கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது. இவ்வூரில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. புகழ்பெற்ற நாதஸ்வர கலைஞர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் இவ்வூரில் பிறந்தவர். அப்பளம் தயாரித்தல், சேகோ பேக்டரிகள், பல விளைபொருட்கள், விவசாயம், கார்மெண்ட்ஸ், கோழிப்பண்ணைகள் என பல தொழில்கள் நடைபெறும் ஊர் ஆகும். நாமகிரி அம்மன் என்ற பெண் தெய்வத்தின் பெயரால் காரணப்பெயர் கொண்டு நாமகிரிப்பேட்டை என்ற பெயரை பெற்றது. இங்கு கோரையாறு ஆறு ஓடுகிறது. ஆஞ்சநேயர் திருக்கோவில் அருகாமையில் உள்ளது. மேலும் பசிரிமலை, நாமகிரிமலை, சங்கராண்டி கரடு, கலிய பெருமாள் கரடு மற்றும் இருளங்கள் கரடு போன்ற சிறு சிறு மலைகள் இப்பேரூராட்சிப் பகுதியில் காணப்படுகின்றன. அமைவிடம்நாமகிரிப்பேட்டை பேரூராட்சி நாமக்கல்லிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 11 கி.மீ. தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு17.86 சகி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 54 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,875 வீடுகளும், 21,250 மக்கள்தொகையும் கொண்டது.[4] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 11°28′N 78°16′E / 11.47°N 78.27°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 273 மீட்டர் (895 அடி) உயரத்தில் இருக்கின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia