கிராத இராச்சியம்கிராத இராச்சியம் (Kirata Kingdom), பண்டைய பரத கண்டத்தின் சமசுகிருத இந்து இலக்கியங்களில், இமயமலையின் தற்கால நேபாளம், சிக்கிம் மற்றும் பூட்டான் நாடுளில் வாழ்ந்த மலைவாழ் மக்களான கிராதர்களின் நாடாக அறியப்படுகிறது. [1] கிராத இராச்சியத்தின் கிராதப் போர்வீரர்கள் குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டனர். தற்காலத்தில் கிராத இராச்சியத்தின் மலை வேடுவர்களான கிராதர்கள், இமயமலைச் சமவெளிப் பகுதிகளான இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்காளத்தின் டார்ஜீலிங் பகுதிகள், அசாம், திரிபுரா மற்றும் பாகிஸ்தானின் வடமேற்கு மலைப்பகுதிகளில் குடிபெயர்ந்துள்ளனர். [2] கிராத வம்சத்தை நிறுவியவர் மன்னர் யாலம்பர் எனக் கருதப்படுகிறது. மகாபாரதக் குறிப்புகள்
கிராத நாட்டு மக்களை, மத்திய இந்தியாவின் விந்திய, சாத்பூரா மலைகளில் வாழ்ந்த வேட்டுவ மக்களான புலிந்தர்களுடன் தொடர்புருத்தி காட்டுகின்றனர். இதனையும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia