சூர்பரக நாடுசூர்பரக நாடு (Shurparaka) பரத கண்டத்தின் புராண காலத்திலிருந்த ஒரு நாடாகும். இந்நாட்டை நிறுவியவர் பரசுராமர் ஆவார். நர்மதை ஆறு மேற்குக் கடலில் கலக்கும் வடிநிலத்தில் சூர்பரக நாட்டை நிறுவினார். சூர்பரக நாட்டைக் குறித்து மகாபாரத காவியத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பரசுராமர் இந்நாட்டை காசிப முனிவருக்கு வழங்கி விட்டதாகவும், பின்னர் காசிபர் அந்நாட்டை அந்தண ஆட்சியாளர்களுக்கு வழங்கி விட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. தற்போது சூர்பரக நாட்டின் பெயர் சூபரா அல்லது நள சூர்பரா எனும் பகுதியாக மகாராட்டிரம் மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் அரபுக்கடற்கரையில் உள்ளது. [1] மகாபாரதக் குறிப்புகள்சகாதேவனின் தென்னிந்திய படையெடுப்புகள்மகாபாரதம், சபா பருவத்தின் அத்தியாயம் 30-இல், தருமன் நடத்திய இராசசூய வேள்வியின் பொருட்டு, நவநிதிகளை பெற்று வர சகாதேவன் தென்னிந்திய நாடுகள் மீது படையெடுத்தார். அவந்தி நாடு, சௌராட்டிர நாடு, மத்திர நாடு, பௌரவ நாடு, தண்டக நாடு, விதர்ப்ப நாடு, மற்றும் சூர்பரக நாடுகளை வென்று பெரும் கப்பப் பொருட்கள் பெற்றதாக உள்ளது. [2] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia