ஹூனப் பேரரசு

ஹூனர்கள் (Huna Kingdom), இமயமலைத் தொடரில், சீனாவின் ஜிங்சியாங் மாநிலம், இந்தியாவின் காஷ்மீர், கிழக்கு ஜம்மு பகுதிகளில் வாழும் நாடோடிகள். இமயமலைத் தொடரில், ஹூனர் இனக் குழுக்கள், இந்திய மக்களுடன் குறைந்த அளவு தொடர்பு கொண்டிருந்தனர். மகாபாரத இதிகாசத்தில் ஹூனர் இனக் குழுக்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹுனர் இன மக்கள் எங்கும் ஒரு இடத்தில் நிலையாக தங்கி வாழும் பழக்கமற்ற நாடோடி மக்களாவர். ஹூனர்களை பற்றி மகாபாரதம் ஆறாம் பருவத்தில், 9 மற்றும் 50வது அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளது. ஹூனர்கள் குருச்சேத்திரப் போரில் பாண்டவர் அணியின் சார்பாக, கௌரவர் அணிக்கு எதிராகப் போரிட்டனர்.[1]

ஹூனர்கள் இந்தோ-ஆரியரல்லாத, வட இந்திய இனக்குழுக்களில் கிராதர்கள் போன்றவர்கள்.

மகாபாரத இதிகாசத்தில் ஹூனர்கள்

பாரத வர்சப் பகுதியில் ஹூனர்களின் நாடுகள்

மகாபாரதக் காப்பியத்தில் பீஷ்ம பருவம் (6வது பருவம்) 9வது அத்தியாயாத்தில், இந்தியாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த ஹூனர்கள், மிலேச்சர்கள், குரூரர்கள், யவனர்கள், சீனர்கள், காம்போஜர்கள், தருனர்கள், சுக்ரீத்வாகர்கள், ரமணர்கள், தசமாலிகர்கள் போன்ற இனக் குழுக்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளது.

குருச்சேத்திரப் போரில் ஹூனர்களின் பங்கு

குருச்சேத்திரப் போரின் இரண்டாம் நாள் போரில், கழுகு போன்ற வியுகத்தின் மூக்குப் பகுதியில், ஹூனர்கள், பட்டாச்சாரர்கள், நிசாதர்கள், பிசாசர்கள், பௌரவர்கள், லடாக்கியர்கள், மந்தகர்கள், டங்கர்கள், உத்திரர்கள், தும்புமர்கள், சரவர்கள், வத்ச நாட்டவர்களுடன் புடைசூழ பாண்டவ அணித் தலைவன் தருமனும், இறக்கை பகுதிகளில் நகுலன் மற்றும் சகாதேவனும் அணி வகுத்து நின்றார்கள் என மகாபாரதம் விளக்குகிறது. (பீஷ்ம பருவம் (6), அத்தியாயம் 50)

மேற்கோள்கள்

  1. http://www.sacred-texts.com/hin/m06/m06009.htm
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya