கரூசக நாடு

மகாபாரத இதிகாச கால நாடுகள்

கரூசக நாடு (Karusha Kingdom), மகாபாரத இதிகாசம் குறிப்பிடும் பண்டைய பரத கண்டத்து யாதவர்கள் ஆண்ட நாடுகளில் ஒன்றாகும். கருச நாடு, தற்கால மத்தியப் பிரதேசத்தின் தாதியா மாவட்டம் என அறியப்படுகிறது. கருச நாட்டு மன்னர்களில் புகழ் பெற்றவர் தந்தவக்ரன் ஆவார். சேதி நாட்டிற்கு தெற்கில் அமைந்த கருச நாட்டின் மன்னன் தந்தவக்ரன், சிசுபாலனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். தந்தவக்ரனும், சிசுபாலனும் கிருஷ்ணாரால் கொல்லப்பட்டனர்.

மகாபாரதக் குறிப்புகள்

போஜர்கள், குந்தலர்கள், காசி-கோசலர்கள், குந்திகள், சேதிகளுடன் கருசர்களையும், பண்டைய ஆரியவர்த்த இன மக்களாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. (மகாபாரதம் துரோண பருவம் 6: 9)

கூட்டாளிகள்

குருச்சேத்திரப் போரில்

குருச்சேத்திரப் போரில், சேதி நாட்டு சிசுபாலனின் மகன் திருஷ்டகேது தலைமையிலான படைப்பிரிவில், கருச நாட்டுப் படைகள் மற்றும் காசி நாட்டுப் படைகளும் இணைந்து பாண்டவர் அணியில் சேர்ந்து, கௌரவர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.[2]

கருச நாட்டவர்களுடன், மத்சயர்கள், பாஞ்சாலர்கள், சூரசேனிகள், சிருஞ்சயர்கள், சோமகர்கள், சூரர்கள், பிரபாதகரர்கள், கேகயர்கள், பாண்டியர்கள், காஞ்சிகள், மூசிகர்கள், சேரர்கள், சோழர்கள், திராவிடர்கள், ஆந்திரர்கள், கோசலர்கள், மகதர்கள், சாத்தியகி தலைமையிலான யாதவர்கள் பாண்டவர் அணியில் சேர்ந்து குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டனர். (6-47,54,98,107) (7-9,11,21,153), (8-12,30,47,49,54,56,73,78

இதனையும் காண்க

மேற்கோள்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya