கி பி முதலாம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் புலி நாட்டின் அமைவிடம்
மூசிக நாடு அல்லது புலி நாடு (Mushika Kingdom) சங்க காலத்தில்தென்னிந்தியாவின், தற்கால கேரளத்தில் இருந்த தமிழ் பேசிய மக்களின் நாடுகளில் ஒன்றாகும். மூசிக நாட்டை, எழிமலை நாடு, கொளத்து நாடு, சிரக்கல் நாடு என்றும் அழைப்பர். இதன் தலைநகரம் எழிமலை ஆகும். இந்நாட்டின் புகழ் பெற்ற மன்னர் எழிமலை நன்னன் ஆவார்.
தற்கால கேரள மாநிலத்தின் வடக்குப் பகுதியான மலபார் பகுதியின், கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புறம், பாலக்காடு மாவட்டங்கள், துளு மற்றும் குடகு பகுதிகள், மூசிக நாட்டின் பகுதிகளாக இருந்தது.[1] சங்க கால தமிழகத்தின் ஐந்து முக்கிய அரச மரபுகளான சேரர், பாண்டியர், சோழர், ஆய் ஆகியவற்றுடன் மூசிக நாடும் ஒன்றாக விளங்கியது.
எழிமலை நன்னன் எழிமலையின் சக்தி வாய்ந்த ஆட்சியாளராக விளங்கினார். நன்னன் தனது ஆட்சிக் காலத்தில், எழிமலை நாட்டை தற்கால கூடலூர் மற்றும் கோயம்புத்தூர் வரை விரிவுபடுத்தினார்.
கி பி ஐந்தாம் நூற்றாண்டில் சேர நாட்டுடன் நடந்த போரில் நன்னன் இறந்து விட, மூசிக நாட்டை (எழிமலை நாட்டை) சேர நாட்டுடன் இணைக்கப்பட்டது.
மூசிக நாட்டினர் தன்னாட்சி பெற்ற மன்னர்களாக இருந்தாலும், சில நேரங்களில் பாண்டிய, சேர மன்னர்களுக்கு திறை செலுத்துபவர்களாகவும் இருந்துள்ளனர்.
சிரக்கல், கண்ணூர், தலைநகராகக் கொண்ட கொளத்திரி அரச மரபினர்கள், மூசிக நாட்டு நன்னனின் வழித்தோன்றல்கள் ஆவார்.[2][3][4][5]
தோற்றம்
கேரளோற்பத்தி எனும் நூல், எழிமலை நாட்டு அல்லது மூசிக நாட்டு அரச மரபினர், சேர மன்னர் சேரமான் பெருமாளின் நேரடி வழித்தோன்றல்கள் எனக் கூறுகிறது.[6][7]புராணக் கதைககளின்படி பரசுராமன், இராமகதா மூசிகன் என்பவரை மூசிக மரபின் முதல் மன்னராக நியமித்தார்.
[8][9]
சேர, சோழ, பாண்டிய அரச குலங்கள், தற்கால திருவனந்தபுரம் பகுதியிலிருந்தே தோன்றியதாக கூறப்படுகிறது.[10][11]
மூசிக அரச மரபினர், சங்க கால வேளிர்களின் வழித்தோன்றல்கள் என்றும் கூறப்படுகிறது.[12]
பல நூற்றாண்டுகளாக எழிமலை எனும் மூசிக அரச மரபினர், சேர, சோழ, பாண்டிய, ஆய், மற்றும் சிங்கள அரச மரபினருடன் திருமணத் தொடர்பு கொண்டிருந்தனர்.[13]
மேலும் மகதர்கள், சேதிகள், யதுக்கள் மற்றும், இலங்கையர்கள், கலிங்கர்கள் ஆகிய அரச மரபினரிடையேயும், எழிமலை மன்னர்கள் திருமணத் தொடர்பு கொண்டிருந்தனர்.[14][15]
தற்போது உள்ள அரச மரபினர்களில், திருவிதாங்கூர் அரசமரபினரும், மூசிக (கொளத்திரி) அரசமரபினரும், சகோதிரி உறவு முறை கொண்ட அரச மரபினர்கள் ஆவார்.[16][17][18][19][20] மூசிக மற்றும் திருவிதாங்கூர் அரச மரபினர், மூசிக எனும் பொதுப் பெயரால் அறியப்படுகிறார்கள். மேலும் வரலாற்று பதிவேடுகளில், இரு அரசமரபினரையும் கொளத்திரி மற்றும் கொளசொரூபம் என்ற பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளது.[21][22]
திருவிதாங்கூர் அரச மரபினர் போன்று, மூசிக அரசமரபினரும், திருவனந்தபுரம் பகுதியிலிருந்து தோன்றியவர்களாக கருதப்படுகிறார்கள். மேலும் இரு அரசமரபினர்களிடையே குழந்தைகளைத் தத்து எடுத்தல், தத்து கொடுத்தல் பழக்கம் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. திருவிதாங்கூர் அரசமரபினர், மூசிக அரசமரபினர்களிடமிருந்து இளவரசர்களையும், இளவரசிகளையும் தத்து எடுத்தும், கொடுத்தும் இருக்கிறார்கள்.[23][24] சங்க காலத்தில், ஒரு வேளிர் குல மன்னர், ஆயி நன்னன் எனும் பெயர் கொண்டிருந்தார்.[25]
மூசிக அரச மரபில், புகழ் பெற்ற உதயன் , வேன்மான் நன்னன் அல்லது நன்னன் என்ற மன்னர்களின் பெயர்கள் வரலாற்றுப் பதிவேடுகளில் குறிக்கப்பட்டுள்ளது.[14][15]
மூசிக நாட்டில் வாழ்ந்த ஆதுலன் என்பவர் எழுதிய மூசிக வம்சம் எனும் சமஸ்கிருத நூலில், 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மூசிக மன்னர் ஸ்ரீகந்தன் முடிய, மூசிக நாட்டின் 118 மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூசிக நாட்டுப் பகுதியை கொளத்து நாடு அல்லது கொளத்திரி நாடு என்றும் அழைக்கப்பட்டதாக அந்நூலில் கூறப்பட்டுள்ளது.
மூசிக நாட்டின் கொளத்திரி மன்னர்களின் அரண்மனை இன்றும் சிரக்கல் பகுதியில் உள்ளது.
மூசிக மன்னர்கள் வடக்கு கேரளா பகுதியில் பல கோயில்களையும், கோட்டைகளையும், துறைமுகங்களையும் எழுப்பியுள்ளனர்.[26] அரக்கல் மற்றும் நிலேஷ்வரம் அரச குடும்பத்தினர் கொளத்திரி அல்லது சிரக்கல் அரச குடும்பத்தின் கிளைக் குடும்பத்தினர் ஆவார்கள்.
திருமண உறவுகள்
வேளிர்களின் வழித்தோன்றலான, மூசிக மன்னர் நன்னன் வம்சத்தவர்கள், சேர, சோழ, பாண்டியர் மற்றும் வேளிர்களுடன் பெண் கொடுத்தும், எடுத்தும் திருமண உறவு வைத்திருந்தனர்.[27][28]
மூசிக மன்னர்கள், தங்கள் பெயருக்கு பின் நன்னன் என்ற அடைமொழியுடன் விளங்கினர். சங்க காலப் புலவரான பரணர், தமிழகம், முசிக நாடு, வேனாடு, மற்றும் வேளிர் நாட்டில்நன்னன் என்ற பெயர் கொண்ட அரச குலத்தவர்கள் இருந்ததாக கூறுகிறார்.[29][30]
கிடைத்த நூல்களின் மூலமும், வரலாற்று ஆய்வுகளின் படியும், மூசிக நாட்டினரின் திருமணத் தொடர்புகளும், கூட்டாளி நாடுகளும், அதன் காலங்கள் குறித்த முழுவதுமாக கிடைக்காவிட்டாலும், சில தகவல்கள் மட்டும் கிடைத்துள்ளது.
அதே ஈசானவர்மன், சோழ நாட்டின் இளவரசியையும் மணந்துள்ளார். இவ்விணையரின் மகன் நெருப்புராமன் ஈசானவர்மனுக்குப் பின் அரியணை ஏறினார்.[33][34][35][36]
ஈசானவர்மனின் சகோதிரியின் கணவரான சோழ மன்னர் ஜெயராசரகுபதியாவர்.[35][37]
பிற்கால மூசிக மன்னர் விரோசனன், பல்லவர்களை வென்று, பல்லவ இளவரசி ஹரிணியை மணந்தார்.[34][38]
கந்தன் காரி வர்மன் , கி பி 11-ஆம் நூற்றாண்டின் மூசிக மன்னர் ஆயி சேர மன்னர் வீரகேரளனின் நெருங்கிய உறவினர் ஆவார்.[39][40] சோழ அரசுக்கு எதிராகப் படையெடுத்த கந்தன் காரி வர்மனும், வீரகேரளனும், இராசேந்திர சோழனால் தோற்கடிப்பட்டனர்.
கந்தன் காரி வர்மன், இராமகூட மூவர் திருவடி என்ற பட்டப் பெயராலும் அழைக்கப்பட்டான்.[41][42]திருவடி என்ற பட்டம் ஆயி அரச மரபினருக்கு மட்டுமே உரித்தானது. ஆயி அரச மரபின் ஒரு கிளையான, திருவனந்தபுரம் பகுதியில் தோன்றிய மூசிக நாட்டு நன்னன் வழி வந்த அரசர்களும் திருவடி எனும் பட்டப் பெயரிட்டுக் கொண்டனர்.[43][44]
தொன்மவியல் குறிப்புகள்
மகாபாரதம் எனும் காவியத்தில் மூசிக நாட்டை, சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.[45]திருவனந்தபுரம் பகுதியில் இருந்த ஆய் அரச மரபிலிருந்து, மூசிக அரச மரபினர் தோன்றியிருக்கலாம் என மகாபாரத காவியம் கூறுகிறது.
சங்க கால தமிழ் மக்களின் கூத்துகளில், பழையன்கடியை தலைநகராகக் கொண்ட புகழ் பெற்ற மூசிக நாட்டு மன்னன் நன்னனைப் பற்றி பாடப்படுகிறது.
கி மு 100-இல் வாழ்ந்த உலகைச் சுற்றிய கிரோக்கப் பயணி ஸ்டிராபோ என்பவர் தனது பயணக்குறிப்பில் மூசிக நாட்டை குறிப்பிட்டுள்ளார்.[46][47] கி பி இரண்டாம் நூற்றாண்டின் மூசிக (நன்னன்) அரச மரபினர், ஆய் அரச மரபிலிருந்து தோன்றியவர்கள் என கிரேக்கப் புவியிலாளர் தாலமி கூறியுள்ளார்.[48]
↑Devi, R. Leela (1986-01-01). History of Kerala (in ஆங்கிலம்). Vidyarthi Mithram Press & Book Depot. p. 218.
↑Menon, T. Madhava; Linguistics, International School of Dravidian (2002-01-01). A handbook of Kerala (in ஆங்கிலம்). International School of Dravidian Linguistics. p. 626. ISBN9788185692319.
↑Menon, T. Madhava; Linguistics, International School of Dravidian (2000-01-01). A handbook of Kerala (in ஆங்கிலம்). International School of Dravidian Linguistics. p. 120. ISBN9788185692272.
↑Education, Kerala (India) Dept of; Menon, A. Sreedhara (1962-01-01). Kerala District Gazetteers: Trivandrum (in ஆங்கிலம்). Superintendent of Government Presses. p. 146.
↑Menon, T. Madhava; Linguistics, International School of Dravidian (2000-01-01). A handbook of Kerala (in ஆங்கிலம்). International School of Dravidian Linguistics. p. 147. ISBN9788185692272.
↑Menon, T. Madhava; Linguistics, International School of Dravidian (2002-01-01). A handbook of Kerala (in ஆங்கிலம்). International School of Dravidian Linguistics. ISBN9788185692319.
↑Devi, R. Leela (1986-01-01). History of Kerala (in ஆங்கிலம்). Vidyarthi Mithram Press & Book Depot. p. 225.