சீனர்கள், மகாபாரதம்
மகாபாரதக் குறிப்புகள்குருச்சேத்திரப் போரில் பகதத்தனின் பிராக்ஜோதிச படையில், கிராதர்களுடன், சீன வீரர்களும் இருந்தனர். மகாபாரதம், பீஷ்ம பருவம், அத்தியாயம் 65 & 66-இல் சீனர்களுடன், மிலேச்சர்கள், யவனர்கள், சகர்கள், சிதியர்கள், காம்போஜர்கள், குந்தலர்கள், ஹூணர்கள், பாரசீகர்கள், தருணர்கள், இரமணர்கள், தசமாலிகர்கள் போன்ற வெளிநாட்டு இன மக்களைக் குறித்துள்ளது. [1] மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில் சீனர்களை இமயமலைத்தொடர்களில் உள்ள உத்தரபாத நாடுகளின் யவனர்கள், கிராதர்கள், காந்தாரர்கள், ஷபரர்கள், சகர்கள், துஷாரர்கள், பகவலவர்கள், மத்திரர்கள், காம்போஜர்களுடன் ஒப்பிட்டு பேசுகிறது. இம்மக்கள் வேத கால பண்பாட்டை பின்பற்றாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.[2] மகாபாரத வன பருவத்தில், கிராதர்களின் இமயமலை வழியாக சீனர்களின் நிலப்பரப்பை அடையலாம் எனக்குறித்துள்ளது. பரத கண்டத்திற்கு வடக்கே அமைந்த நாடுகளின் ஒன்றாக சீனர்களின் நாட்டை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia