கோலா கிராய்-கோலா பிலா நெடுஞ்சாலை
கோலா கிராய்-கோலா பிலா நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 34 (ஆங்கிலம்: Malaysia Federal Route 34; அல்லது Kuala Krai–Kuala Pilah Highway), (Central Spine Road) (CSR); மலாய்: Laluan Persekutuan Malaysia 34 அல்லது Lebuhraya Kuala Krai–Kuala Pilah அல்லது Lingkaran Tengah Utama (LTU) என்பது மலேசியா, கிளாந்தான்; பகாங்; நெகிரி செம்பிலான் மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டணமில்லா நெடுஞ்சாலை ஆகும். [1] தீபகற்ப மலேசியாவின் மையத்தில் கட்டப்பட்டு வரும் இந்த நெடுஞ்சாலை 340 கிமீ (210 மைல்) நீளம் கொண்டது. கட்டி முடிக்கப்பட்டதும் இந்தச் சாலை, முன்னாள் இருவழி சாலைகளான கூட்டரசு சாலை 8 (குவா முசாங் நெடுஞ்சாலை) மற்றும் கூட்டரசு சாலை 9 (காராக்-தம்பின் நெடுஞ்சாலை) ஆகியவற்றை மாற்றி அமைக்கும். பொதுகோலா கிராய்-கோலா பிலா நெடுஞ்சாலையின் கட்டுமானம்; கட்டுமானத் திட்டம் 3-இல் (Package 3) தொடங்குகிறது. இந்தத் திட்டம் மெராப்போவில் தொடங்கி கம்போங் ரெலோங் வரை நீடிக்கிறது. இது குவா மூசாங் நெடுஞ்சாலையில் தொடங்கி செகார் பெரா வழியாகச் செல்கிறது. இந்தச் சாலைவழி, தற்போது மோசமான வாகன விபத்துகளுக்கு பெயர் பெற்ற இடமாக விளங்குகிறது. தற்போது கட்டப்பட்டு வரும் இந்த நெடுஞ்சாலையில் சுற்றுச்சூழலுக்கான நீண்ட கடவைகள் (Eco-viaducts) அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு ரவுப் முதல் காராக் வரையிலான கட்டுமானத் திட்டம் 5 (Package 5) அடுத்த கட்டமாகும். மாற்றுவழிப் போக்குவரத்துஇந்தத் திட்டம் பெந்தோங் நகரைக் கடந்து சென்று, கூட்டரசு சாலை 8 (கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையுடன்) இணைக்கப்படும். அந்த வகையில், ரவுப் மற்றும் பெந்தோங் இடையிலான செங்குத்தான மலைப் பகுதியில் இருந்து ஒரு மாற்றுவழிப் போக்குவரத்திற்கு உதவுகிறது. இந்த நெடுஞ்சாலை சிறப்புக் கூறுகள்
சாலைத் தரம்இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2] விளக்கம்
காட்சியகம்![]() மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia