காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை
காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை இது இரட்டை - மூன்று வழி நெடுஞ்சாலை (Dual Three Lane Highway). இதைக் காஜாங்-சிரம்பான் விரைவுச்சாலை என அழைப்பதும் உண்டு. இந்தச் சாலையின் நீளம் 44.3 கி.மீ. (27.5 மைல்).[2] பொதுகாஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை செமினி, பாஜம், மந்தின், தெமியாங் வழியாகச் சென்று சிரம்பான் உள்வட்டச் சாலையுடன் இணைக்கும் வகையில் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகப் போக்குவரத்து நெரிசலைக் கொண்ட மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை; மற்றும் கோலாலம்பூர் - சிரம்பான் விரைவுச்சாலை; ஆகிய சாலைகளைத் தவிர்ப்பதற்கு இந்த காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை மிகவும் பயனுள்ள சாலையாக அமைகின்றது.[3] விவரங்கள்காஜாங்கில் இருந்து செத்துல் வரை ஆறுவழிப் பாதை நடுத்தர வேக வரம்புகள் மணிக்கு 80 கி.மீ. (காஜாங் பெர்டானா - காஜாங் தெற்கு) (Kajang Perdana–Kajang South) மற்றும் (செத்துல்-பரோய்) (Setul–Paroi); மற்ற அனைத்து இடங்களிலும் அதிவேக வரம்புகள் மணிக்கு 110 கி.மீ. அவசர தொலைபேசி கடல் மட்டத்தில் இருந்து 258 மீட்டர் உயரத்தில் (சிரம்பான்) நகருக்கு அருகில் உள்ள மந்தின் மலை உச்சியில் அமைந்துள்ள செத்துல் சுங்கச் சாவடிதான் மலேசியாவின் மிக உயரமான சுங்கச்சாவடி ஆகும். மேற்கோள்கள்
மேலும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia