புத்ராஜெயா-சைபர்ஜெயா விரைவுச்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 29 (ஆங்கிலம்: Malaysia Federal Route 29; அல்லது Putrajaya–Cyberjaya Expressway); மலாய்: Laluan Persekutuan Malaysia 29 அல்லது Lebuhraya Putrajaya-Cyberjaya) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலம்; கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு முக்கியமான சாலை ஆகும்.
இந்தச் சாலை முன்பு பூச்சோங்கில் இருந்து டெங்கில் வரையிலான 15-ஆவது சிலாங்கூர் மாநிலச் சாலையாக அறியப்பட்டது. புதிய சாலைக்கான கட்டுமானம் 1997-இல் தொடங்கியது; மற்றும் நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
முதல் கட்டம்:டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில்(Damansara–Puchong Expressway) இருந்து பெர்சியாரான் உத்தாரா மாற்றுச் சாலை (Persiaran Utara Interchange) வரை;
இரண்டாவது கட்டம்: பெர்சியரான் உத்தாரா முதல் டெங்கில் வரை;