குஷ்பு சுந்தர்
குஷ்பு சுந்தர் (இயற்பெயர்: நக்கர்த் கான், பிறப்பு: செப்டம்பர் 29, 1970) தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி.யை மணந்தார்.[2] தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.[3] குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்நடித்த திரைப்படங்கள்தமிழ்த் திரைப்படங்கள்நடித்த தொலைக்காட்சி நாடகங்கள்அரசியல்தி.மு.க.2010 இல் தி.மு.க. கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார்.[4][5] 2014 இல் தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.[6][7] இந்திய தேசிய காங்கிரசுபின்னர் 26 நவம்பர் 2014 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.[8] பாரதிய ஜனதா கட்சிபின்னர் 12 அக்டோபர், 2020இல் குஷ்பு காங்கிரஸ்லிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia