சின்னக்கம்பாளையம்
சின்னக்கம்பாளையம் (ஆங்கிலம்:Chinnakkampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்தாராபுரம் - உடுமலைப்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் சின்னக்கம்பாளையம் பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 63 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் மேற்கில் 24 கி.மீ. தூரத்தில் உடுமலைப்பேட்டை நகரமும், கிழக்கில் 8 கி.மீ. தூரத்தில் தாராபுரம் நகரமும், வடக்கில் 24 கி.மீ. தூரத்தில் குண்டடமும் , தெற்கில் 35 கி.மீ. தூரத்தில் பழனி நகரமும் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு32.30 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,445 வீடுகளும், 11,546 மக்கள்தொகையும் கொண்டது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia