குண்டடம் ஊராட்சி ஒன்றியம்
குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்திநாலு பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குண்டடத்தில் இயங்குகிறது. மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 71,781 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,114 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 25 ஆக உள்ளது. [5] ஊராட்சி மன்றங்கள்குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:
அருகில் உள்ள நகரங்கள்குண்டடம் நகரின் சுற்றுவட்டார பிற ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளது. அவ்வகையில் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. போக்குவரத்துபல்லடம்-தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குண்டடம். இங்கிருந்து தாராபுரம், பல்லடம், கோயம்புத்தூர், ஒட்டன்சத்திரம், மதுரை, தேனி, திருநெல்வேலி, இராமேஸ்வரம், தூத்துக்குடி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி, சூலூர், காங்கயம், செம்பட்டி, வத்தலக்குண்டு, விருதுநகர், ராஜபாளையம், மேட்டுப்பாளையம் என தமிழக தென் மாநில பகுதிகளுக்கும் மேற்கு தமிழக மாவட்டங்களுக்கும் தாராள போக்குவரத்து வசதி உள்ளது. இந்த பேருந்துகளின் தலைமையிடமாக கோயம்புத்தூர் உள்ளது. மேலும் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சிகளுக்கும் இங்கிருந்து தான் பேருந்து வசதி உள்ளது. வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia