கொமாரலிங்கம்
கொமாரலிங்கம் (ஆங்கிலம்:Komaralingam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சியானது விவசாயம் சார்ந்த பேருராட்சியாகும். இது குமரலிங்கம் மேற்கு, குமரலிங்கம் கிழக்கு என இரண்டு வருவாய் கிராமங்களையும், குமரலிங்கம், சமராயப்பட்டி, பெருமாள்புதூர், குருவக்குளம் என 4 குக்கிராமங்களையும் கொண்டது. அமைவிடம்குமரலிங்கம் பேரூராட்சியிலிருந்து, திருப்பூர் 75 கி.மீ.; மடத்துக்குளம் 8 கி.மீ.; உடுமலைப்பேட்டை 15 கி.மீ.; பழநி 15 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு32 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 110 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,854 வீடுகளும், 13,642 மக்கள்தொகையும் கொண்டது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia