சிர்க்கோனியம்(II) ஐதரைடு
சிர்க்கோனியம்(II) ஐதரைடு (Zirconium(II) hydride) என்பது ZrH2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். லேசர் நீக்கம் மூலம் தாழ்வெப்பநிலையில் இச்சேர்மம் தனித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது [2]. திராக்கு சமன்பாடு, ஆர்ட்ரீ-போக் முறை, சார்பியல் விசைக் கணக்கீட்டு ஆய்வுகள் போன்ற ஆய்வுகளில் சிர்க்கோனியம்(II) ஐதரைடு பெரும்பாலும் ஆய்வுப்பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நிலைத்தன்மை, வடிவியில் மற்றும் MH4, MH3, MH2, அல்லது MH. போன்ற வாய்ப்பாடுகளைக் கொண்ட ஐதரைடுகளின் ஆற்றல்கள் முதலியன இந்த ஆய்வுகளில் ஆராயப்படுகின்றன. இருமுகிக் கட்டமைப்பில் (C2v) சிர்க்கோனியம்(II) ஐதரைடு காணப்படுகிறது. மேலும் இச்சேர்மத்தில் ஐதரசனும் சிர்க்கோனியமும் முறையே −1 மற்றும் +2 என்ற முறையான ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகின்றன. ஏனெனில் சிர்க்கோனியத்தின் மின்னெதிர் தன்மை ஐதரசனின் மின்னெதிர்தன்மையைக் காட்டிலும் குறைவாகும். MH2 (M = Ti-Hf) என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட உலோக ஐதரைடுகளின் நிலைப்புத்தன்மை அணு எண் அதிகரிக்க அதிகரிக்க குறைகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia