சிர்க்கோனியம்(IV) அயோடைடு
சிர்க்கோனியம்(IV) அயோடைடு (Zirconium(IV) iodide) என்பது ZrI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் தண்ணீர் முன்னிலையில் சிதைவடைகிறது. மிக எளிதாக கிடைக்கக்கூடிய இவ்வுப்பு முற்காலத்தில் சிர்க்கோனியம் உலோகத்தை தூய்மைப்படுத்தும் போது இடைவிளைபொருளாக இருந்தது. அமைப்புஈரிணை உலோக ஆலைடுகள் போலவே சிர்க்கோனியம்(IV) அயோடைடும் பல்லுறுப்பி அமைப்பை ஏற்றுள்ளது. Zr(IV) மையங்களில் ஒவ்வொரு மையமும் ஒரிணை விளிம்புநிலை அயோடைடு ஈனிகள் மற்றும் நான்கு இரட்டைப்பால அயோடைடு ஈனிகளையும் கொண்டிருக்கின்றன என்று எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விளிம்புநிலை Zr-I பிணைப்பின் இடைவெளி அளவு 2.692 மற்றும் 3.030 Å ஆகும்.[1][2] தொகுப்பு மற்றும் வினைகள்எளிதில் ஆவியாகும் இச்சேர்மம் முழுமையான நான்முக ZrI4 மூலக்கூறுகளாகப் பதங்கமாகிறது. தூளாக்கப்பட்ட சிர்க்கோனியம் உலோகத்துடன் அயோடின் நேரடியாக வினைபுரிவதன் மூலம் சிர்க்கோனியம்(IV) அயோடைடைத் தயாரிக்கலாம்.[3] சூடான கம்பியுடன் தொடர்பு ஏற்படும்போது சிர்கோனியம் (IV) அயோடைடு வெப்பச் சிதைவு அடைந்து தூய்மையான நீட்சியடையும் சிர்கோனியம் தயாரிப்பது முதலாவது தொழிற்சாலை முறை வணிக ரீதியான உற்பத்தியாக விளங்கியது. இந்தப் படிகச் சட்ட செயல்முறை 1925 ஆம் ஆண்டு அன்டன் எடுவார்டு வான் ஆர்கெல் மற்றும் யான் எண்டிரிக் டி போயர் ஆகியோரால் கண்டறியப்பட்டது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia