சிர்க்கோனைல் குளோரைடு
சிர்க்கோனைல் குளோரைடு (Zirconyl chloride) என்பது [Zr4(OH)8(H2O)16]Cl8(H2O)12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக ZrOCl2*8H2O, என்று இச்சேர்மம் அடையாளப்படுத்தப்பட்டு சிர்க்கோனைல் குளோரைடு எண்ணைதரேட்டு என்று குறிப்பிடப்படுகிறது. இவ்விரு வகைகளுமே வெண்மை நிறத்துடன் காணப்படுகின்றன மற்றும் இச்சேர்மங்களே தண்ணீரில் கரையக்கூடிய சிர்க்கோனியம் வழிப்பொருட்களாகவும் உள்ளன. ZrOCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய சேர்மம் சரியாக வரையறுக்கப்படவில்லை. [1] தயாரிப்பு மற்றும் அமைப்புசிர்க்கோனியம் நாற்குளோரைடு|சிர்க்கோனியம் நாற்குளோரைடை நீராற்பகுப்புக்கு உட்படுத்தி சிர்க்கோனைல் குளோரைடு தயாரிக்கப்படுகிறது. அல்லது சிர்க்கோனியம் ஆக்சைடுடன் ஐதரோ குளோரிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தினாலும் இதைத் தயாரிக்கலாம்[2]. நான்குநிலை கட்டமைப்பை சிர்க்கோனைல் குளோரைடு ஏற்றுள்ளது. நான்கு Zr4+ மையங்களுடன் நான்கிணை ஐதராக்சைடு பாலமிட்ட ஈந்தணைவிகள் இணைந்துள்ள [Zr4(OH)8]8+. நேர்மின்னயனிகளால் இப்படிநிலைகள் ஆக்கப்பட்டுள்ளன. குளோரைடு எதிர்மின்னயனிகள் ஈந்தனைவிகள் அல்லாமல் Zr(IV) இன் உயர் ஆக்சைடு நாட்டத்திற்கு இசைவானவையாக உள்ளன. இவ்வுப்பு நாற்கோணமாக படிகமாகிறது[1] மேற்கோள்கள்
புற இனைப்புகள்
. |
Portal di Ensiklopedia Dunia