சிர்க்கோனியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Zirconium acetylacetonate) என்பது Zr(C5H7O2)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச்சேர்மமாகும். ஒருங்கிணைவுச் சேர்மமான இது சிர்கோனியத்தின் பொதுவான அசிட்டைலசிட்டோனேட்டு ஆகும். வெள்ளை நிறத்தில் திண்மப் பொருளாக காணப்படுகிறது. முனைவற்ற கரிம கரைப்பான்களில் அதிக கரைதிறனை வெளிப்படுத்துகிறது, ஆனால் எளிய ஐதரோகார்பன்களில் கரைவதில்லை. [1]
2.19 Å நீளம் கொண்ட எட்டு ஏறக்குறைய சமமான Zr-O பிணைப்புகளுடன் சதுர எதிர்பட்டக வடிவவியலைக் கொண்டுள்ளது. மூலக்கூறு சமச்சீர் D2 ஆகும் அதாவது நாற்தொகுதி மையச்சமசீரில் அமைந்திருக்கும்.[2] புரோட்டான் அணுக்கருக் காந்தஒத்திசைவு அலைமாலையியல் மூலம் ஒரு மெத்தில் குறிப்பலையை கவனிப்பதன் மூலம், உயர் ஒருங்கிணைப்பு எண் சேர்மங்கள் முப்பரிமான வேதியியல் அல்லாத இறுக்கத்தை அறியலாம்.[3]
தொடர்புடைய 1,1,1-முப்புளோரோ அசிட்டைலசிட்டோனேட்டு சிர்க்கோனியம் அசிட்டைலசிட்டோனேட்டைக் காட்டிலும் எளிதில் ஆவியாகும்.[3]
↑Clegg, William (1987). "Redetermination of the structure of tetrakis(acetylacetonato)zirconium(IV)". Acta Crystallographica Section C43 (4): 789–91. doi:10.1107/S0108270187094083.
↑ 3.03.1Morris, Melvin L.; Moshier, Ross W.; Sievers, Robert E. (1967). "Tetrakis(1,1,1-trifluoro-2,4-pentanedionato)zirconium(and Hafnium)". Tetrakis(1,1,1-trifluoro-2,4-pentanedionato)zirconium (and Hafnium). Inorganic Syntheses. Vol. 9. pp. 50–52. doi:10.1002/9780470132401.ch15. ISBN978-0-470-13168-8.